ஆசியா

பிலிப்பைன்ஸில் மீளவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • December 3, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் இன்று (03.12) மீளவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலைியல் இன்றைய தினம் மீளவும் 6.6 ரிக்டர் தஅளவில் நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

காதலர் விஜய் வர்மாவுக்காக தமன்னா செய்த அர்ப்பணிப்பு

  • December 3, 2023
  • 0 Comments

இந்தியாவில் தயாராகி ‘நெட்ஃபிளிக்ஸில் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்த இந்தி ஆந்தாலஜி படம் ‘லஸ்ட் ஸ்டோரீஸ். கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இந்தியப் பார்வையாளர்களை வைரஸாகத் தொற்றியது இந்தப் படம். ஓடிடியில் இன்றைக்கும் இந்தப் படம் பிரபலமாக இருக்கிறது. இதுவரை உலக அளவில் இந்த ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ படத்தை 8 கோடி பேர் பார்த்திருக்கிறார் என்கிறது நெட்ஃபிளிக்ஸ். அனுராக் காஷ்யப் இயக்கிய படம் இது. இத்தனை ஹிட் அடித்த ஒரு ஆந்தாலஜியை மீண்டும் பிராண்ட் செய்து பணம் பார்க்க விரும்பிய […]

இலங்கை

பயங்கரவாத தாக்குதல் : பாரிஸ் தாக்குதல் குறித்து மக்ரோன் விமர்சனம்!

  • December 3, 2023
  • 0 Comments

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகே நிகழ்த்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். குறித்த தாக்குதலில் ஜெர்மன் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தில் பொலிஸார் சரியான சமையத்தில் வரவில்லை என்றால் மேலும் பலர் உயிரிழந்திருப்பார்கள் எனக் கூறியதாகவும், பாலஸ்தீனர்களின் நிலை கண்டு தான் கவலையடைவதாக தெரிவித்தாகவும் சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இது குறித்து […]

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை கண்டித்த போப் பிரான்சிஸ்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முறியடிக்கப்பட்டதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் “கூடிய விரைவில்” புதிய போர்நிறுத்தத்தை எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை பரிமாறிக் கொள்ள அனுமதித்த இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான சண்டையில் ஏழு நாள் இடைநிறுத்தம் வெள்ளிக்கிழமை சரிந்தது. ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் தனது குண்டுவீச்சு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை 15,400க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பாலஸ்தீனிய […]

பொழுதுபோக்கு

‘தலைவர் 171’-இல் ரஜினிக்கு வில்லனாகும் ஹீரோ…. இவருக்கு இப்படி ஒரு பிளேஸ்பேக் இருக்கா?

  • December 3, 2023
  • 0 Comments

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததக உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை மாபெரும் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை லோகேஷ் தொடங்காவிட்டாலும், அதில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் சிவகார்த்திகேயனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க […]

மத்திய கிழக்கு

தெற்கு காசா பகுதியில் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்திய வரும் இஸ்ரேல்!

  • December 3, 2023
  • 0 Comments

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் சந்தேகிக்கின்றது. காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 15,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உலகம்

நிலச்சரிவில் சிக்கி உயிரோடு மண்ணில் புதைந்த 7 சுரங்கத் தொழிலாளர்கள்; ஜாம்பியாவில் சோகம்!!

  • December 3, 2023
  • 0 Comments

ஜாம்பியா நாட்டில் தொடர் மழை காரணமாக, தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பதோடு 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கங்களுக்குள் தொழிலாளர்கள் நுழைந்து கனிமங்களை எடுத்து வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. ஆபத்தான முறையில் இந்த சுரங்கங்களுக்குள் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இதனிடையே ஜாம்பியா நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுரங்கம் அமைந்துள்ள சிங்கோலா […]

இலங்கை

பெருந்தொகையான் பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது: பொலிஸார் தீவிர விசாரணை

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு 12, வாழைத்தோட்டம் , சில்வர் ஸ்மித் லேனைச் சேர்ந்த சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31,750 பாலியல் ஊக்க மருந்து மாத்திரைகளும், 259 பாலின ஊக்கி ஜெல் பாக்கெட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரிடம் நடத்திய […]

மத்திய கிழக்கு

பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிப்பு!

  • December 3, 2023
  • 0 Comments

பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நபர்களைக் கொண்ட மருத்துவக் குழு, கடந்த 7ஆம் திகதியன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் வீடியோக்களில் கடத்தப்பட்டவர்களில் காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகளையும், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் வழங்கும் சாட்சியங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் மேற்படி அறிவித்துள்ளனர்.  குழுவின் தலைவரான சுகாதார அமைச்சின் அதிகாரி ஹகர் மிஸ்ராஹி கூறுகையில்,  பணயக்கைதிகள் இறந்துவிட்டார் என்பதைத் தீர்மானிக்க போதுமானதாக இருக்கும் என்று […]

உலகம்

இஸ்ரேலிய குண்டுவீச்சு : ‘காசாவின் 75% மக்கள்’ உள்நாட்டில் இடம்பெயர்வு

காஸாவின் மக்கள் தொகையில் 75% உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் சனிக்கிழமையன்று வடக்கு காசாவில் இரண்டு சம்பவங்களில் குறைந்தது 160 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனம் (OCHA) தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஆறு மாடி கட்டிடம் மற்றும் காசா நகரின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு முழுத் தொகுதி மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “குண்டுவீச்சு தாக்குதல்ளுக்கு முன்னர், இஸ்ரேலியப் படைகள் இந்தப் பகுதிகளை காலி செய்யும்படி துண்டுப் பிரசுரங்களை கைவிட்டன” என்று  ஐக்கிய நாடுகளின் […]