இந்தியா

மைச்சாங் சூறாவளி : சென்னை விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மைச்சாங் சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இரவு 11 மணி வரை தனது செயல்பாடுகளை மூடுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. “கடுமையான வானிலை காரணமாக இன்று 23. 00 மணி வரை விமானநிலையம் வருகை மற்றும் புறப்பாடு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளது” என்று சமூக ஊடக தளமான X இல் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவு முதல் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னையில் இருந்து […]

பொழுதுபோக்கு

தங்கலானை ஆஸ்கருக்கு அனுப்ப படக்குழு தீவிரம்.. உண்மையா?

  • December 4, 2023
  • 0 Comments

தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் வேலை நடப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார். தங்கலான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள். இதற்கிடையே படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் திட்டத்தில் பா.இரஞ்சித் மற்றும் படக்குழுவினர் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து உண்மை […]

இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடைபவனி நிகழ்வு!

  • December 4, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஒரு நிகழ்வாக சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி நேற்று (03.12) நடைபெற்றது. இணைந்த சுகநல விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி  தெய்வி தபோதரன், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சி. சபாஆனந்த் மற்றும் விரிவுரையாளர்கள் கூட்டாகக் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த இந்த நடை பவனி பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, கே.கே.எஸ் […]

பொழுதுபோக்கு

கமலும் ஸ்ரீதேவியும் காதலித்தார்களா? அவரே சொன்ன செம பதில் வெளியானது…

  • December 4, 2023
  • 0 Comments

கமல் ஹாசனும், ஸ்ரீதேவியும் காதலித்தார்கள் என்று வெளியான தகவல் குறித்து கமல் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. பிரபலமான நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றி பிறகு ஹீரோனியாகவும் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும் ஆனால் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி கருதப்படுகிறது. ஸ்ரீதேவியை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது பாரதிராஜா […]

இலங்கை

பொலிஸார் தாங்கள் செய்யும் சமூகவிரோத செயல்களை மறைப்பதற்காக அப்பாவிகளை சித்திரவதை செய்கின்றனர் – செல்வராசா கஜேந்திரன்!

  • December 4, 2023
  • 0 Comments

கடந்த வாரம் வட்டுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் மிகக் கொடூரமான முறையிலே சித்திரவதை செய்யப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் எனஷ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த்தாக கூறப்படும் இளைஞரிற்கு நீதி கோரி வட்டுக் கோட்டைச் சந்தியில் நேற்று (04.12) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து […]

இலங்கை

திருகோணமலையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பண்ணையாளர் ஒருவர் பலி!

  • December 4, 2023
  • 0 Comments

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பித்திடல் பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி பண்ணையாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தம்பலகாமம் – சிப்பித்திடல் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் (36) என்ற பண்ணையாளரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த குறித்த பண்ணையாளர் நேற்று (03) காலை கால்நடைகளை மேய்ப்பதற்காக பாலம்போட்டாறு பகுதியில் உள்ள ஊத்த வாய்க்கால் என்ற வாய்க்காலை கடந்து சென்றபோது காணாமல் போயிருந்ததாகவும், பொதுமக்களினால் […]

இலங்கை

கந்தளாய் : சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு குவியும் பாராட்டு

பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் பாடசாலைகளுக்கு இடையில் 7 பேர் கொண்ட குழுக்கள் முறையில் கந்தளாய் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப் போட்டியில் மாகாண மட்டடத்தில் (03) தி/இ.கி.ச கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வெற்றியீட்டியுள்ளது. 11 வயது மற்றும் 13 வயது மாணவர்கள் பங்குபற்றிய போட்டிகளில் 2 ஆம் இடத்தையும் 09 வயது மற்றும் 17 வயது மாணவர்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 15 வயது மாணவர்கள் கலந்து கொண்டு 5 ஆம் இடத்தையும் பெற்று […]

தமிழ்நாடு

இருவரின் தலையைத் துண்டித்து நரபலி!! நடிகர் பார்த்திபன் பதிவிட்ட ட்விட்டால் பரபரப்பு

  • December 4, 2023
  • 0 Comments

இரண்டு மனித தலைகளை வெட்டி நரபலி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்து, ‘இது என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று ட்விட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மனித தலைகளை வெட்டி வாழை இலையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும்படியான நரபலி வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பார்த்து அதிர்ந்து போய், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ‘இது என்னவென்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்! நானும் […]

ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

  • December 4, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் கனமழைக்கு பிறகு தென்மேற்கு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அமலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெவோன் மற்றும் சோமர்செட் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யார்ட்டி நதி, ரிவர் யோ மற்றும் ஷ்ரீன் நீர் ஆகியவை வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, Gov.uk இணையதளத்தின்படி, இங்கிலாந்து முழுவதும் தற்போது 22 வெள்ள எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையி்ல் பாதுகாப்பாக இருக்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக  டெவோனில் உள்ள […]

வட அமெரிக்கா

செங்கடல் பகுதியில் வைத்து அமெரிக்க போர்க்கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல்

  • December 4, 2023
  • 0 Comments

மத்திய கிழக்குப் பகுதியில் செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இடையில் சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு பிறகு மீண்டும் தாக்குதல் நடந்து வருகிறது. ஹமாஸை […]