இலங்கை

வெள்ளவத்தையின் பல பகுதிகளில் மின்தடை!

  • August 18, 2023
  • 0 Comments

மின்கம்பி ஒன்று சேதமடைந்துள்ளதால் வெள்ளவத்தையின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை பகுதியில் மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்துள்ளது. இதேவேளை, பல பிரதேசங்களுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை தற்போது முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

ஆசியா

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

  • August 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் குற்றவாளிகள் குற்றத்தை முன்கூட்டியே ஒப்புக்கொண்டால் அத்தகையோருக்கான தண்டனை 30 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய ஆலோசனைக் குழு முன்வைத்த வழிகாட்டிகளில் அதுவும் ஒன்றாகும். வழக்குகளுக்கும் சீக்கிரமாகத் தீர்வுகாணப்பட்டால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வோருக்கான தண்டனைகள் குறைக்கப்படுகின்றன. ஆலோசனைக் குழு வெளியிட்ட புதிய வழிகாட்டிகள் இப்போதிருக்கும் நடைமுறையை இன்னும் தெளிவாக்குகிறது. குற்றவாளி ஒருவர் எப்போது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துத் தண்டனையை எந்த அளவு குறைக்கமுடியும் என்பதை […]

இலங்கை

ஹோமாகம பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை!

  • August 18, 2023
  • 0 Comments

ஹோமாகமவை அண்மித்த பகுதியில் உள்ள  குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஹோமாகம கைத்தொழில் பூங்காவில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் நேற்று (17.08) ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைப்பதற்காகவே இந்த விசேட கோரிக்கையை அந்த பிரிவு முன்வைத்துள்ளது. ஹோமாகம கைத்தொழில் பூங்காவில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோட்டே நகரசபையின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு – செயலிழக்க செய்த அதிகாரிகள்

  • August 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இரண்டாம் உலகப்போரினைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. Colombes (Hauts-de-Seine ) நகரில் இந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதன்கிழமை காலை இந்த வெடிகுண்டு rue Anatole-France வீதியில் இடம்பெற்று வரும் கட்டுமானப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து கட்டிடடப்பணியில் ஈடுபட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நேறடறு பிற்பகல் எவ்வித குழப்பங்களும் ஒன்றி அமைதியான முறையில் வெடிகுண்டு அகற்றும் பணி இடம்பெபெற்றது. எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வெடிகுண்ட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இச்சம்பவத்தின் போது Paris மற்றும் Nanterre […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நிதி உதவி தொடர்பில் புதிய சட்டம்

  • August 18, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பிரசவத்தின் பின்னர் குழந்தைகளை பராமறிப்பதற்கு உரிய நிதி வழங்குவது தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் எல்டன் கில்ட் என்று சொல்லப்படுகின்ற பிரசவ காலத்திற்கு பிறகு குழந்தைகளை பராமறிப்பதற்கு வழங்கப்படும் நிதி உதவி ஆகும். அதாவது பிரசவ காலத்திற்கு பிறகு குழந்தைகளை பராமறிப்பதற்காக பெற்றோர் வேலைக்கு செல்லாது விட்டால் இவ்வயைாகன எல்டன் கில்ட் சொல்லப்படுகின்ற விசேட நிதியத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது எல்டன் கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த விசேட நிதியத்தை பெறுவது தொடர்பான […]

இலங்கை

இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நீர் பாவனையாளர்களுக்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கைக்கான ஒட்டுமொத்த தினசரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலின் திறன் 9% குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கடும் மழை!! 90 விமானங்கள் ரத்து

  • August 17, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, மரங்கள் முறிந்து விழுந்து வீதிகள் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கனமழையுடன் சூறாவளியும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் அதிகாரிகள் மிகவும் பரபரப்பான மற்றும் முக்கிய ஐரோப்பிய மையமான பிராங்பேர்ட் விமான நிலையத்தில் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். இன்று மட்டும் 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது […]

இலங்கை செய்தி

கூகுள் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: சிஐடி விரிவான விசாரணை ஆரம்பம்

  • August 17, 2023
  • 0 Comments

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களை ஆன்லைனில் பெற்ற வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெண்களின் பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய தகவல்களைப் பெறுவது என்ற போர்வையில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைப் பெறுவதற்கு இணையத்தில் கூகுள் படிவம் பரிமாறப்படுகிறது […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரித்து வரும் விபச்சாரம்

  • August 17, 2023
  • 0 Comments

கடந்த வருடம் இலங்கையில் பாலியல் தொழிலாளிகளுக்கு எதிராக 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 355 விபச்சார விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இருந்து இந்த குழுவினருக்கு எதிராக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை அதிகப் பெறுமதியைப் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 2021ல் 199 விபச்சார விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி அந்த ஆண்டில் 145 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி

  • August 17, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது “நல்ல விஷயம்” என்று பிரிட்டனின் உயர்மட்ட மக்கள்தொகை நிபுணர் தெரிவித்துள்ளார், பிறப்புகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதாக புதிய தரவுகள் காட்டுகின்றன. பேராசிரியை சாரா ஹார்பர் CBE, ஆக்ஸ்போர்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் பாப்புலேஷன் ஏஜிங் நிறுவனர் மற்றும் இயக்குநரும், முன்னாள் அரசாங்க ஆலோசகரும், மேற்கில் பிறப்பு விகிதம் குறைவது “நமது கிரகத்திற்கு நல்லது” என்றார். தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ONS) உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இங்கிலாந்து மற்றும் […]

You cannot copy content of this page

Skip to content