இலங்கை

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -34 பேர் பலி!

  • August 19, 2023
  • 0 Comments

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் அறிவிப்பின் படி, கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை மொத்தம் 60,136 வழக்குகள் பதிவாகியுள்ளன,  மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 12,886 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 பகுதிகளை அதிக  ஆபத்துள்ள பகுதிகளாக MOH  அடையாளப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு வழக்குகள் […]

ஐரோப்பா

உக்ரைனின் செர்னிஹிவ் நகரை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – ஐவர் பலி!

  • August 19, 2023
  • 0 Comments

வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா இன்று (18.09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன். 37 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 11 குழந்தைகள்  உள்ளடங்குவதாகவும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, ரஷ்யாவின் ஏவுகணை Chernihiv  வை குறிவைத்து தாக்கியதாகவும், இதில், பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், தியேட்டர் ஆகியன சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

பொழுதுபோக்கு

பிரபல பெண் இயக்குனருடன் இணைகின்றார் ஜெயம் ரவி… புதிய திட்டம் வெளியானது

  • August 19, 2023
  • 0 Comments

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகியவற்றில் டைட்டில் ரோலில் நடித்த ஜெயம் ரவி, பண்டைய சோழ மன்னர் அருண்மொழி வர்மன் அதாவது ராஜ ராஜ சோழனின் உண்மையான சித்தரிப்புக்காக அதிக பாராட்டுகளைப் பெற்றார். தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள ‘இறைவன்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’, கிருத்தி ஷெட்டியின் ‘ஜெனி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் புதிய படத்தில் ரவி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக […]

ஐரோப்பா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ! அவசரநிலை பிரகடனம்

கனடாவின் மேற்கு எல்லையிலுள்ள பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் . இங்கு திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி நிலையில் இந்த பிராந்தியம் முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 36 ஆயிரம் பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2 ஆயிரத்து 400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன. இதே போல் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ பரவி வருகிறது. அங்கு வசிக்கும் பலர் கார் மற்றும் விமானம் என அவசர அவசரமாக ஊரை காலி […]

ஆசியா

கஜகஸ்தானில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை இடித்து அகற்றம்(வீடியோ)

  • August 19, 2023
  • 0 Comments

கஜகஸ்தான் நாட்டில் நிறுவப்பட்டு இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது. கஜகஸ்தானில் சீரமைக்கும் பணியின் அடிப்படையாக லெனின் சிலையை அகற்றவும் அந்த நாட்டு அரசு திட்டமிட்டு இருந்தது . இந்நிலையில் தெற்கு பகுதியில் உள்ள அல்தாய் நகரில் உள்ள லெனின் சிலை கிரேன் மூலம் அகற்றப்பட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வரிகிறது

இலங்கை

பூஜித ஜயசுந்தர பயணித்த பொலிஸ் வாகனம் விபத்தில் சிக்கியது!

  • August 19, 2023
  • 0 Comments

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பயணித்த பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாடாளுமன்ற வீதியில் ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர் ஓட்டிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு காரின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு: தமிழகம் முழுதும் இருந்து குவிந்த தொண்டர்கள்

  • August 19, 2023
  • 0 Comments

மதுரையில் நாளை (20) நடைபெறவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மதுரை அருகே வலையங்குளத்தில் நாளை நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டிற்கான பந்தல், மேடை, தொண்டர்களுக்கு உணவு வழங்குமிடம், வாகனம் நிறுத்துமிடங்கள், கழிப்பறைகள் வசதிகள் போன்ற ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. பந்தல்களில் 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மாநாட்டு நிகழ்ச்சியில் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பந்தலைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் […]

ஆசியா

தைவான் வான்வெளியில் பறந்த சீன போர் விமானங்களால் பரபரப்பு

  • August 19, 2023
  • 0 Comments

தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளன. எனினும், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் ராணுவ பயிற்சிகளை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஜின்குவா செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இதனை, […]

இலங்கை

காணி விடுவிப்பு தொடர்பிலான ஜனாதிபதி செயலணி கூட்டம்! கலந்து கொள்ளாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

மன்னார் மாவட்டத்தின் கீழ் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் நெறிப்படுத்தலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இன்றைய தினம் சனிக்கிழமை(19) மன்னார் மாவட்ட செயலகத்தில் இக்கூட்டம் இடம் பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் பிரதி நிதிகள், வன வள திணைக்கள பிரதி நிதிகள்,வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் […]

பொழுதுபோக்கு

ஜவான் படத்தில் விஜய்? பிரம்மாண்டமான நிகழ்ச்சியிலும் பங்கேற்பதாக தகவல்

  • August 19, 2023
  • 0 Comments

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்போது தளபதி விஜய் ‘ஜவான்’ சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும், ஷாருக்கானுடன் மேடையை பகிர்ந்து கொள்வார் என்றும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் […]

You cannot copy content of this page

Skip to content