இந்தியா

இந்தியாவில் அரசு பேருந்துக்குள் பெய்த மழை…குடை பிடித்தபடி ஓட்டிய சாரதி (வீடியோ)

  • August 26, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால், பேருந்து ஓட்டுநர் குடை பிடித்து ஒட்டிய அவலம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.அந்த பேருந்தில் தான் இந்த அவலம் நடந்துள்ளது. அங்கு, இயக்கப்படும் ஒரு அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தவாறே ஓட்டுநர் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் […]

ஐரோப்பா

ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல நிறுவனம்!

  • August 26, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்ய போரைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்ற நிலையில், அந்த வரிசையில் தற்போது ஹெய்னெகன் நிறுவனமும் இணைந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புவதாகவும், ஹெய்னெகன் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெய்னெகன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் 300 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் உள்ள ஏழு மதுபான ஆலைகள் உள்பட […]

இலங்கை

04 வார காலத்திற்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும்!

  • August 26, 2023
  • 0 Comments

தற்போதைய வரட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அனல் மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க முடியும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது சந்தானத்தின் ‘கிக்’!

நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் சந்தானம் வெற்றியைப் பெறுகிறார். அவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜுடன் தனது வரவிருக்கும் ரொமான்டிக் ஆக்ஷன் படமான ‘கிக்’ படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளார், இது செப்டம்பர் 1 ஆம் திகதி திரையரங்குகளில் வர உள்ளது. இது அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்திற்குப் பிறகு சந்தானத்தின் அடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சந்தானம் முதல்முறையாக பின்னணிப் பாடகராக மாறியதால் கிக் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. கிக்கில் ‘சனி இஸ் […]

இலங்கை

கல்வியங்காட்டில் வீட்டிலிருந்தவரை கட்டி வைத்து கத்தி முனையில் கொள்ளை முயற்சி!

  • August 26, 2023
  • 0 Comments

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக குறித்த கும்பல் அடாவடிபுரிந்துள்ளது எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக […]

இந்தியா

சென்னை -மலேசியா இடையே விமான சேவை அதிகரிப்பு!

சென்னை, அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தினமும் 2 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 ஏர் ஏசியா விமானங்கள், 1 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 1 என 5 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. அதுபோல கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 5 விமானங்கள் வந்தன. சென்னை- மலேசியா இடையே தினமும் 10 விமான சேவைகள் இயக்கப்பட்டன. மலேசியா சுற்றுலா தளமாக இருப்பதாலும் மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் […]

இலங்கை

இலங்கையில் அடகு வைக்கப்பட்டுள்ள பெருமளவான நகைகள்!

  • August 26, 2023
  • 0 Comments

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 10,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை அடமானம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிலர் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பதினைந்து மாவட்டங்களை பாதித்துள்ள கடும் வறட்சி காரணமாக 200,000க்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். பயிர் சேதம் அறுபதாயிரம் ஏக்கரைத் தாண்டியுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் சுறாமீனால் நபருக்கு நேர்ந்த கதி

  • August 26, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் சுறாமீன் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் கடற்கரைக்கு அருகில் உலாவலில் ஈடுபட்டிருந்த 44 வயது நபர் சுறாவால் தாக்கப்பட்டுள்ளார். நபர் சுமார் 30 வினாடிகள் சுறா மீனிடம் இருந்து தப்பிக்க போராடியதாகவும், காயங்கள் காரணமாக அவர் சிரமத்துடன் கரைக்கு நீந்தியதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில […]

இந்தியா

‘ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’: தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை கொடுக்கும் மசோதாவிற்கு உடனடியாக ஸ்டாம்ப் ஒட்ட முடியாது ஒரு மசோதா ஆளுநர் கையில் இருந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு, புதிய கல்விக் கொள்கையில் இருந்து பிட் அடித்து காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என தமிழிசை காட்டமாக விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் உலகத்துக்கு வருவது எனக்கு […]

ஆசியா

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 08 பேர் கைது!

  • August 26, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ISIS மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் அந்நாட்டின் சட்ட அமலாக்க நிறுவனங்களால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (CTD) இன்றைய (26.08) தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CTDயின் கூற்றுப்படி, மாகாணத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் 74 உளவுத்துறை பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதன்போது ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் […]

You cannot copy content of this page

Skip to content