இலங்கை

இலங்கை : மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

  • December 20, 2023
  • 0 Comments

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட  யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1ஆம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நாடு சிறப்பு மருத்துவர்கள் உட்பட 1,700 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை இழந்துள்ளதுடன், […]

இலங்கை

இலங்கை – உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

  • December 20, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான APOSA உயர்தரப் பரீட்சை தொடர்பான ஆதரவு வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்துவது டிசம்பர் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பரீட்சை திணைக்களம் அறிவிக்கிறது. அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை […]

பொழுதுபோக்கு

நடிகை ஹேமா சவுத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • December 20, 2023
  • 0 Comments

பழம்பெரும் நடிகையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கல்லூரி தோழியுமான ஹேமா சவுத்ரி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழம்பெரும் கன்னட நடிகை ஹேமா சவுத்ரி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை ஹேமா சவுத்ரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மயங்கிய நிலையில் பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் […]

ஆசியா

சீனாவை அச்சுறுத்திய நிலநடுக்கம் – மீட்புப் பணிகள் தீவிரம்

  • December 20, 2023
  • 0 Comments

சீனாவின் வடமேற்கில் உள்ள கான்சு (Gansu) மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது. 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2ஆவது நாளாக தேடல், மீட்புப் பணிகள் தொடருகின்றன. கூடுதல் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கான்சு மாநிலத்தில் சுமார் 150,000 வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்த குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மிக மோசமாக உலுக்கிய டஹேஜியா (Dahejia) நகரில் உணவு, போர்வை, […]

பொழுதுபோக்கு

ராகவா லாரன்ஸூக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் லிஸ்ட்

  • December 20, 2023
  • 0 Comments

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த வருடம் வெளியான சந்திரமுகி 2 படம் அவருக்கு பெரிய தோல்வி படமாக அமைந்தது. ரஜினி பெயரையே கெடுத்து விட்டார் என்று ரசிகர்கள் பொங்கிக் கொண்டிருந்த வேலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீஸ் ஆகி ராகவா லாரன்ஸின் சினிமா மார்க்கெட்டையே தலைகீழாக மாற்றி விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட மனம் திறந்து அவரை பாராட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து லாரன்ஸுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்திருக்கிறது. தலைவர் 171:  ராகவா லாரன்ஸ், […]

இலங்கை

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  • December 20, 2023
  • 0 Comments

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது. பரீட்சைக் கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் என்பன பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்கச்சென்ற தந்தை – 5 பிள்ளைகள் மரணம்

  • December 20, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தந்தை கிறிஸ்துமஸுக்குப் பரிசுகளும் இதரப் பொருள்களும் வாங்கச் சென்றிருந்த போது வீட்டில் பரவிய தீயில் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 4 பேர் அவரது பிள்ளைகள். மேலும் ஒருவர் உறவுக்காரப் பிள்ளை என தெரியவந்துள்ளது. 2 மாடி வீட்டில் பரவிய அந்தத் தீயில் 2, 4, 5, 11, 13 வயதுப் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். எனினும் தந்தையின் பெயரையோ பிள்ளைகளின் பெயர்களையோ பொலிஸார் வெளியிடவில்லை. தீ மூண்டதற்கான காரணம் […]

வாழ்வியல்

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

  • December 20, 2023
  • 0 Comments

தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொருவரும் தண்ணீரை வெவ்வேறு வழிகளில் உட்கொள்கிறார்கள். சிலருக்கு தேன் கலந்த தண்ணீரைக் குடிக்க பிடிக்கும், இன்னும் சிலருக்கு எலுமிச்சை சேர்த்து தண்ணீர் குடிக்க பிடிக்கும். இது தவிர, மக்கள் விரும்பி சாப்பிடும் பல வகையான பானங்கள் உள்ளன. பல வித உடல் நல பயன்களுக்காக மக்கள் தாண்ணீர் குடிப்பது வழக்கம். இது தவிர, அனைத்து மருத்துவர்களும், நிபுணர்களும் சூடான […]

செய்தி

யாழில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்

  • December 20, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும் சேயும் கடந்த 16ஆம் திகதி வீடு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடலில் சிவப்பு கை காலில் அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தை […]