ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழந்த மக்கள்

  • April 24, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மக்களில் பத்தில் ஏழு பேர் இதனை தெரிவித்துள்ளனர். sondage de lIfop நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. 72% சதவீதமான மக்கள் மக்ரோனின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர். இவர்களில் 42 % சதவீதமானவர்கள் மிகவும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கையின்மைக்கு ஓய்வூதிய சீர்திருத்தம் பிரதானமான காரணமாக அமைந்துள்ளது. ஜனாதிபதி மக்ரோன் கட்டாயப்படுத்தி ஜனநாயகம் இல்லாமல் […]

வாழ்வியல்

சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் பால்!

  • April 24, 2023
  • 0 Comments

சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் பால் குறித்து இதுவரையில் அறியாதவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பாலேடு என்று சொல்லகூடிய பொருள்கள் தான் முகத்தை பால் போன்று மென்மையாக மாற்றி விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். பால் க்ரீம் என்னும் பாலேடு அல்லது மலாய் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்கின்றன கடலை மாவு போன்றே பாலேடும் சிறந்த மூலப்பொருள். இது சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பல […]

இந்தியா

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடித்த அதிஷ்டம் – வருவாய் 19 சதவீதம் அதிகரிப்பு

  • April 24, 2023
  • 0 Comments

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக வெளியாகியுள்ள காலாண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின்ன் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு துறை இருமடங்கு இலாபத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் நாட்டின் 30 சதவீத உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில் பங்களிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைப்பு காரணமாக எண்ணெய் ரசாயன வணிகம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், இதற்கு மாறாக முன் எப்போதும் இல்லாத அளவு ஜியோவின் செயல்பாட்டு […]

இலங்கை

ஹம்பாந்தோட்டையில் அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • April 24, 2023
  • 0 Comments

ஹம்பாந்தோட்டையில் இன்று அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இது குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் கோரியுள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற நபர் மாயம்

  • April 24, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Euromillions லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற ஒருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த தொகையை வெற்றி பெற்றுள்ளார். அவர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வெற்றி பெறப்பட்ட இத்தொகையை வெற்றியாளர் இதுவரை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 28. இரவு 11.59 மணிக்குள் அவர் தனது வெற்றி பெற்ற பணத்தொகை பெற்றுக்கொள்ளாவிட்டால், வெற்றித்தொகை இரத்துச் செய்யப்ப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற தொகைக்குரிய […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் – பொலிஸார் எச்சரிக்கை

  • April 24, 2023
  • 0 Comments

ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் தொலைபேசி மூலம் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கில் இருந்து பண மோசடிகள் நடைபெற்றுள்ளதனை தொடர்ந்து பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். டியுஸ்பேர்க் நகரத்தில் சில கும்பல் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு தாங்கள் வங்கியில் கடமையாற்றுகின்றதாக தெரிவித்து அறிமுகப்படுத்தியள்ளனர். மேலும் முதியவர்களின் வங்கி அட்டைகளை சரி பார்க்க வேண்டும் என்று தொலைபேசியின் மூலம் கூறி […]

இலங்கை

இலங்கை கர்ப்பிணி தாய்மார்களுக்கு எச்சரிக்கை

  • April 24, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வழக்கமாக 2 லிட்டர் தண்ணீர் குடித்தால், சுமார் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். […]

இலங்கை

இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் மாணவி

  • April 24, 2023
  • 0 Comments

இரத்தினபுரியில் பாடசாலை மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட பலாவெல பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட ரம்புக்கந்த தோட்டத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ்மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் கணேசன் ருச்ஷானி (வயது 15) என்ற மாணவியே, இம்முறை எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தனது வீட்டில் போதிய […]

தமிழ்நாடு

வேலை நேரத்தை உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு – பணிபகிஸ்கரிப்பை அறிவித்த தொழிற்சங்கங்கள்!

  • April 23, 2023
  • 0 Comments

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,   இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  ம.தி.மு.க.,  வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் திகதி  தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. சிஐடியூ மற்றும் ஏஐடியூசிஇ எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிக்ள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் மோதி விபத்து – மூவர் பலி!

  • April 23, 2023
  • 0 Comments

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில்  22 வயதுடை ஆண் ஒருவரும் 21 மற்றும் 22 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சாலையின் முழு அகலத்தையும் மூடாத தடுப்புகள் மூடப்பட்டிருந்தாலும், கார் ஒரு குறுக்கு வழியில் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

You cannot copy content of this page

Skip to content