H-1B விசா மற்றும் குடியுரிமை சோதனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த டிரம்ப் நிர்வாகம் திட்டம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர் விசா நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நல்ல திறன் கொண்ட வெளிநாட்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே குரல் எழுப்பிய நிலையில் தற்போது டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிநுழைவுத் துறையின் தலைவர் ஜோசஃப் எட்லோ வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார். தற்போது அமெரிக்கக் குடியுரிமைப் பெறுவதற்கான தேர்வு மிக சுலபமாக […]