நடிகர் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்துவருகிறார் விக்ரம்.
தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும்வகையில் அடுத்தடுத்த பிராஜெக்ட்களை தேர்ந்தெடுத்து நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்ட விக்ரமின் மஹாவீர் கர்ணா படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை கேரளாவின் பத்மநாப சாமி கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது.
வரலாற்றுப் படமாக திட்டமிடப்பட்டிருந்த மஹாவீர் கர்ணா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது.
மலையாள இயக்குநர் ஆர்எஸ் விமல் இந்தப் படத்தை இயக்கவிருந்தார். மேலும் இந்தப் படம் 32 மொழிகளில் டப்பிங் செய்யப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
படத்திற்காக தன்னுடைய உடலை மாற்றிய விக்ரம், குதிரையேற்றத்திற்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் போர் காட்சிகளுக்காகவும் தயாராகியிருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த இந்தப் படம் ஒருகட்டத்தில் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக இயக்குநர் ஆர்எஸ் விமல் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தப் படம் தடைகளை தாண்டி சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ஆர்எஸ் விமல் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்