உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது.
உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த விடயம் கவலை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலத்திலும் கடலிலும் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கை சொல்கிறது.
ஒவ்வொரு கண்டமும் வறட்சி, வெள்ளம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
நூறு ஆண்டுக்கும் மேலாக உலக வானிலை ஆய்வகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கடந்த எட்டு ஆண்டாகத்தான் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, பூமி தொடர்ந்து சூடாகி வருகிறது. பனியோடைகள் உருகுவதாலும், கடல் வெப்பம்-அடைவதாலும் கடலின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இயற்கைக்கு மட்டுமின்றி மனிதர்களுக்குப் பெரிய பாதிப்பு.
ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் வானிலை சீர்குலைவினால் ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்தனர்.