செய்தி

146 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி படைத்த சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரக விளங்கும் விராட் கோலி இந்த காலண்டர் ஆண்டில் விளையாடிய போட்டிகளின் மூலம் இவ்வாண்டில் 2000 ரன்களை கடந்தார்.

ஒரு வீரர் தனது காலண்டர் ஆண்டில் அதிகபட்சமாக 2000 ரன்களை கடப்பது என்பது எளிதானது அல்ல. இந்திய வீரர் விராட் கோலி இதனை ஏழாவது முறையாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்) மற்றும் 2019 (2455 ரன்கள்) ஆகிய ஆண்டுகளில் இந்த சாதனையை அவர் செய்திருந்தார்.

1877ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடப்பட்டதிலிருந்து (அதிகாரப்பூர்வ சாதனையின்படி) வேறு எந்த வீரரும் இந்த சாதனையை எட்டவில்லை.

2016 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 86.50 சராசரியும் 80.91 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டு 2595 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் குமார் சங்ககாரா ஆறு ஆண்டுகள் 2000 மேல் ரன்களை கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் , இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனே தலா ஐந்து முறையும் 2000 மேல் ரன்களைக் கடந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content