Tamil News

லியோவிலிருந்த முக்கியமான இருவரை தட்டி தூக்கிய விடாமுயற்சி

அஜித் நடிக்கவுள்ள ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அபுதாபியில் தொடங்க இருப்பதாகவும் தற்போது படக்குழுவினர் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை

குறிப்பாக இந்த படத்தை நாயகி த்ரிஷா என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இருவரும் விஜய்யின் ’லியோ’ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக ஆக்ஷன் கிங் அர்ஜுன், அஜித் உடன் ஏற்கனவே ’மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து அசத்தியிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் சென்னை மற்றும் வட இந்தியாவில் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version