உலகம்

முத்தமிடாததால் சிறுவனின் கன்னதில் அறைந்த துருக்கி அதிபர் எர்டோகன் ; வெடித்த சர்த்சை!

துருக்கி அதிபராக ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளார். இவர், கடந்த ஜூலை 27ஆம் திகதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது, மேடையேறி வந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர், அதிபரின் கையில் முத்தமிடாமல் சென்றுள்ளார். துருக்கிய கலாசாரத்தில் கைகளில் முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது.

பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் கைகளை முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனையடுத்து, அந்தச் சிறுவனின் கன்னத்தில் அதிபர் மெதுவாக அறைவதுபோல தட்டுகிறார். பின்னர், அந்தச் சிறுவன் அதிபரின் கையில் முத்தமிட்டுவிட்டு, பரிசுப்பொருளும் பெற்று செல்கிறார்.

இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிபரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், “இது ஒரு சாதாரண விஷயம்தான்” என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் “மேடையிலேயே ஒரு சிறுவனின் கன்னத்தில் அதிபர் அறைகிறார் என்றால், திரைக்குப் பின்னே என்னவெல்லாம் நடக்குமோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், ”அதிபரின் இந்தச் செயல் அருவெறுக்கத்தக்கதாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், சில பயனர்கள் அதிபரின் செயலை ஆதரித்து கருத்து பதிவிட்டுள்ளனர். துருக்கிய கலாச்சாரத்தில் கைகளில் முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாகக் கூறும் அவர்கள், துருக்கியில். அவ்வாறு செய்யாவிட்டால், “இளம்வயதிலேயே அதை செய்ய திருத்தப்படுகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விவகாரம் துருக்கி அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அதிபர் எர்டோகன் இதற்கு முன்பும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் எர்டோகன் குடும்பத்தின் அண்டை வீட்டாரைப் பார்வையிட சென்றபோது, துருக்கி தேசிய அணி டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் கேட்ட ஒரு குழந்தையை, எர்டோகன் அறைந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டில், சலர்கா சுரங்கப்பாதை திறக்கப்பட்டபோது, ஒரு சிறுவனின் தலையை எர்டோகன் தட்டினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல், கடந்தாண்டு, எர்டோகன் தனது பேரனை அறைந்ததாகவும் கூறப்பட்டது; இருப்பினும், அந்த கருத்தினை மறுத்த எர்டோகன், தனது பேரனின் தலையில் தடவிக் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content