பொழுதுபோக்கு

நாளை நேருக்கு நேர் மோத போகும் பாலாஜி vs தர்ஷன்.. கூடவே நம்ம நயனும் வந்துட்டாங்கபா…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு பிரபலங்கள் நாளை நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.

அதாவது இவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் நாளை வெளிவர இருக்கிறது. அதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அதன்படி பாலாஜி முருகதாஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வா வரலாம் வா நாளை வெளிவருகிறது.

அதேபோன்று மூன்றாவது சீசனில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளரான தர்ஷன் நடித்திருக்கும் நாடு படமும் நாளை வெளியாகிறது.

இதில் அவருடன் இணைந்து மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இவர்களுக்கு போட்டியாக தற்போது ஹீரோவாக ஜெயித்திருக்கும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படமும் வெளிவருகிறது.

இப்படத்தின் ப்ரிவ்யூ ஷோவுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. அதேபோன்று லேடி சூப்பர் ஸ்டாரின் அன்னபூரணியும் நாளை வெளிவர இருக்கிறது.

See also  சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு - இனி என்ன நடக்குமோ...

இந்த இரண்டு படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பாலாஜி, தர்ஷன் படங்களுக்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவு தான். அதனாலேயே ரசிகர்கள் இப்போது இந்த படங்களை ஓடிடியில் பார்க்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 10 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content