அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஆகஸ்ட் 14) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 244.42 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 415.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
(Visited 7 times, 1 visits today)