நீடிக்கும் MH370 விமானத்தின் மர்மம் : இந்திய பெருங்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!
MH370 விமானம் காணாமல் போனது பற்றிய புதிய ஆராய்ச்சி, அதன் இறுதி இரண்டு செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளின் அடிப்படையில் 10 ஆண்டுகால மர்மத்தைத் தீர்த்துவிட்டதாகக் கூறுகிறது.
தாஸ்மேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வின்சென்ட் லைன், மறைந்து வரும் விமானத்திலிருந்து பெறப்பட்ட இறுதிச் செய்திகள், விமானத்தின் எச்சங்களின் மூலம் இருப்பிடத்தின் உறுதியான குறிப்பை வழங்க முடியும் என்று பரிந்துரைத்துள்ளார்.
ஜர்னல் ஆஃப் நேவிகேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், MH370 இன் இறுதி செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை அது மறைவதற்கு முன் அதன் பறக்கும் முறையை நிறுவ மதிப்பாய்வு செய்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள லைன், புதிய ஆராய்ச்சி MH370 விபத்துக்குள்ளானதற்கான தெளிவான பாதையை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தெற்கு இந்தியப் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்துவதற்காக சிதைவுக்கான எதிர்கால தேடலை வலியுறுத்தினார்.