ஜெர்மனியில் பேஸ்புக் பதிவால் பிரஜாவுரிமை பெற்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் சிரியா நாட்டை சேர்ந்த ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 வயதுடைய சிரியா நாட்டை சேர்ந்த பிரஜை ஒருவர் ஜெர்மன் பிரஜா உரிமையை கடந்த நவம்பர் 2023 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிரியா நாட்டை சேர்ந்த நபர் கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பை பாராட்டி சமூக வலைதளஙகளில் பல பிரசுரங்களை மேற்கொண்டுளளார்.
வெளிநாட்டு ஒருவர் ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ளும் பொழுது தான் இஸ்ரேல் நாட்டை அங்கிகரிக்கின்றேன் என்று சத்திய பிரமாணம் செய்து இருத்தல் வேண்டும்.
இந்நிலையில் 18 வயதுடைய இளைஞர் குறித்த சத்திய பிரமாணத்தை செய்ய வில்லை. இதேவேளையில் இவர் இஸ்ரேல் நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பாராட்டி சமூக வலைதளங்களில் பிரசுரங்களை மேற்கொண்ட காரணத்தினால் இவரது பிரஜாவுரிமையை மீள பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த சிரியா நாட்டை சேர்ந்த நபரானவரின் செயலை ஆராய்ந்த அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.