இலங்கை

வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றது! ஜூலி சங்

தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (23.08.2023) ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள்குடியேற்றம், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட மக்களின் பொதுவான உட்கட்டமைப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த சில வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த உண்மைகளை சுட்டிக்காட்டிய ஆளுநர், இலங்கையின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திகளில் திருப்தியடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மக்களுக்காக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இரண்டாவது தடவையாக வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறித்தும் அவருக்கு நல்வாழ்த்துக்களை அமெரிக்க தூதுவர் கூறியிருந்தார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content