LCU-வில் இணையும் ரஜினி? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோக்கி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சமீபத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, தலைவர் 171-வது படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
தற்போது தலைவர் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு 171 வது படத்தில், இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷனில் ‘தலைவர் 171-ஆவது படம் உருவாக உள்ளதால், இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது இப்படம் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி வருகிறது
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் மற்றும் இப்படத்தில் இணையுள்ள முன்னணி நடிகர் பற்றிய தகவல் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நெகடிவ் ஷேடு கொண்ட கேங்ஸ்டார் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இது கேங் ஸ்டார் படம் என கூறப்படுவதால், கைதி, விக்ரம், லியோ வரிசையில் இப்படமும் லோகேஷ் கனகராஜின் எல் சி யு படமாக இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
பான் இந்தியா படமாக இப்படம் உருவாக உள்ளதாகவும், மற்ற மொழி முன்னணி நடிகர்கள் சிலரை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதை போல் சிவகார்த்திகேயன் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2024 துவங்கும் என கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பின்னர் ரஜினிகாந்த் நெகடிவ் ரோலில் நடிப்பதால் கண்டிப்பாக மிகப்பெரிய சம்பவம் செய்ய லோக்கி காத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.