பொழுதுபோக்கு

விரைவில் உருவாகும் சூர்யவம்சம் 2! சரத்குமார் வெளியிட்ட தகவல்

கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’.

இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதில், வில்லனாக நடித்திருந்த ஆனந்த்ராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், ‘சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!

விரைவில் சூர்யவம்சம் – 2!…” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ‘சூர்யவம்சம்’ இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content