விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை!
நாட்டில் தற்போது வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில், பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என 3 காய்ச்சல் வகைகள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணி எடுத்தால் இரத்தக்கசிவு ஏற்பட்டு ஈரல் பாதிக்கப்படுவதுடன் மரணம் ஏற்படக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்புளுவென்சா மிகக் கடுமையாகப் பரவும் என்றும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கு வந்தால்இ இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் காய்ச்சலும்இ நீண்ட நாள் இருமலும் வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நீண்டகால சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றும் சுவாச நோய் உள்ளவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான வைரஸ் தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும் வைத்தியர் உபுல் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.