ஐரோப்பா

இங்கிலாந்தில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளான சிறிய விமானம்: விமானி மரணம்

கிழக்கு இங்கிலாந்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் விமானப்படையை சேர்ந்த விமானி உயிரிழந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை (மே 25) நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

ஸ்பிட்ஃபையர் என்னும் அந்த இரண்டாம் உலகப் போர் காலத்து விமானம் பிற்பகல் 1 மணியளிவில் பறந்துகொண்டிருந்தது சிறிது நேரத்திலேயே அது லிங்கோன்ஷைரில் உள்ள கோனிங்ஸ்பை விமானப் படைத் தளம் அருகே தரையை நோக்கி வேகமாக வந்து விழுந்தது.

உடனடியாக அவசரச் சேவை ஊழியர்களும் காவல்துறையினரும் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றனர். விமானத்திற்குள் விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

அவரது பெயர் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் ஒருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறிய விமானம் என்று உள்ளூர் காவல்துறையினர் கூறினர்.

ஸ்பிட்ஃபையர் போர் விமானங்களில் பறக்கும் ஆற்றல் கொண்ட ஒருசில விமானங்கள் இன்னும் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஆறு விமானங்கள் கோனிங்ஸ்பை விமானப் படைக்குச் சொந்தம்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content