கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். மேடை நிகழ்ச்சிகள், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், சின்ன திரை என இறுதியாக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சிவகார்த்திகேயன்.
அவரது பிறந்தநாளான இன்று பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் சிவகார்த்திகேயனை பங்கம் செய்துள்ளார்.
நேற்று மாலை சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அமரன் என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
முக்கியமாக மேஜர் முகுந்த வரதராஜன் என்ற மறைந்த இந்திய ராணுவ வீரரின் பயோபிக்காக வெளியாகவுள்ளது அமரன்.
இந்தப் படத்தில் தான் சிவகார்த்திகேயன் முதன்முறையாக ராணுவ வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவியும் முக்கியமான கேரக்டர்களில் மேலும் பலரும் நடித்துள்ளனர்.
இதனிடையே சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டும் அவரை குட்டி தளபதி என ரசிகர்கள் பூஸ்ட் அப் செய்து வருகின்றனர். அதேபோல் 12 ஆண்டுகளில் மொத்தமே 21 படங்களில் மட்டும் நடித்து அசுர வளர்ச்சியடைந்துள்ளார் எனவும் சிவகார்த்திகேயனை ஆஹா ஓஹோவென புகழ்ந்து வருகின்றனர்.
இதில் குட்டி தளபதி என்ற கேப்ஷனை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார், அதுவும் ஒரே வார்த்தையில்.
12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி… குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று என்ற போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், “குட்டி தளபதியா?” என நக்கலாக கேள்வி எழுப்பி கலாய்த்துள்ளார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயனை கிரிஞ்ச் ஹீரோ என அடிக்கடி ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இப்போது விஜய்யின் இடத்துக்கு சிவகார்த்திகேயன் காய் நகர்த்தி வருவதை தொடர்ச்சியாக பங்கம் செய்து வருகிறார் அவர்.