சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்… படங்கள் வைரல்
சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்கள் ரியல் ஜோடிகளாக இணைகிறார்கள் என்றால் அவர்களை தாண்டி முதலில் சந்தோஷப்படுவது ரசிகர்கள் தான்.
அப்படி நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் தெலுங்கானாவில் இருக்கும் கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதில் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை அடுத்து எப்போது திருமணம் என அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் சித்தார்த்-அதிதி திருமணம் கோவிலில் வைத்து தென்னிந்திய முறைப்படி எளிமையாக நடந்திருக்கிறது.
அந்த புகைப்படங்களை அவர்களே இன்ஸ்டாவில் வெளியிட புதிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)