பிரதமர் நெதன்யாகு எடுத்த முடிவால் கலவர பூமியான இஸ்ரேல்…
நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய நீதித்துறை மறுசீரமைப்புக்கான முதல் மசோதாவுக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் திங்களன்று ஒப்புதல் அளித்தது.சில அரசாங்க முடிவுகளை நியாயமற்றதாகக் கருதினால் அவற்றை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை இந்த மசோதா கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சுமார் 95% மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் இஸ்ரேலிய மருத்துவ சங்கம் 24 மணி நேர போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறியது.
ஆனால், ஜெருசலேமில் மருத்துவ பராமரிப்பு மற்றும் நாடு முழுவதும் அவசர சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய சட்டத்திருத்தமனாது இறுதி வாக்கெடுப்பில் 64-0 என வெற்றிபெற்றுள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள தெருக்களில் சுமார் 20,000 மக்கள் நீலம் மற்றும் வெள்ளை கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.உரிமைகளை விட்டுத்தர முடியாது எனவும் சர்வாதிகாரிக்கு அடிபணிய முடியாது எனவும் நெதன்யாகுவிடம் இருந்து இஸ்ரேலை காப்பாற்றுங்கள் எனவும் மக்கள் முழக்கமிட்டனர்.
கூட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் பீச்சியடித்ஹ்துள்ளதுடன், கண்ணீர் குண்டுகளையும் வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கலில் 19 பேர்கள் வரையில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியானது.