விளையாட்டு

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது.

அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ICC அறிவித்திருந்தது.

அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளரான இந்தியாவை சேர்ந்த முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய முக்கிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வங்காளதேசத்தை சேர்ந்த வீராங்கனைகளான நஹிதா அக்தர், பர்கானா ஹோக் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சாடியா இக்பால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக வங்காளதேசத்தை சேர்ந்த நஹிதா அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content