பிரான்ஸில் மாயமான சிறுவன் – தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்
பிரான்ஸில் காணாமல்போன 2 வயதுச் சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றனர்.
பிரான்ஸ் பொலிஸார் அதற்கான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளது. ஆகாயம் வழியாகவும் நிலத்திலும் தேடல் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எமைல் (Émile) என்ற அந்தச் சிறுவன் தமது தாத்தா பாட்டியின் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போயுள்ளார்.
அந்தச் சம்பவம் 8 ஆம் திகதி Alpes-de-Haute-Provence என்ற பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் நடந்தது.
சிறுவன் நன்றாக நடக்கக்கூடியவன் என்றும் கடத்தப்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டது. அந்தக் கிராமத்தில் சுமார் 20 வீடுகள் தான் உள்ளன.
சிறுவன் சிறிது தூரம் சென்ற பின் காணாமல் போயிருக்கலாம் அல்லது எங்கேயாவது மறைந்திருக்கலாம் என்று அப்பகுதி மேயர் கூறினார்.