மொரோக்கோ நிலநடுக்கத்தால் ஒரே கிராமத்தில் பாதிப்பேர் மரணம்
மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் டாபிகாக்டே (Tafeghaghte) கிராமத்தைச் சேர்ந்த 200 பேரில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவந்துள்ளது.
அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை… காப்பாற்றிக்கொள்ள நேரமில்லை என இடிபாடுகளிலிருந்து வெளியே வந்த ஹசான் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஊர்மக்கள் ஒன்று இறந்துவிட்டனர் அல்லது மருத்துவமனையில் உள்ளனர் என இன்னொருவர் குறிப்பிட்டார்.
இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் ஏதும் அங்குக் கிடையாது. அத்துடன் வெளியிலிருந்து உதவி இன்னும் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உலக நாடுகள் வழங்கும் ஆதரவை மொரோக்கோ அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஹசான் கூறினார். உயிரிழந்ததமது 3 மகன்களும் ஒன்றாக அணைத்துக்கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தந்தை அப்தூ ரஹ்மான் குறிப்பிட்டார்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர்கள் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அட்லாஸ் மலைகளில் உள்ள பல கிராமங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவே மொரோக்கோவை உலுக்கிய ஆக மோசமான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.