ஆசியா செய்தி

சிங்கப்பூரில் மறைந்த ஆ.பழனியப்பனுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்

சிங்­கப்­பூ­ரில் மறைந்த நாடா­ளு­மன்ற மொழி­பெ­யர்ப்­பா­ள­ரும் சமூக சேவை­யா­ள­ரு­மான ஆ. பழ­னி­யப்­ப­னின் சேவை­களைப் போற்றி நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

கடந்த மே 4ஆம் தேதி 73 வயதில் கால­மான திரு பழ­னி­யப்­ப­னுக்­கான இரங்­கல் உரை­யு­டன் தொடங்­கிய நேற்­றைய கூட்­டத்­தில், அவ­ரின் நாடா­ளு­மன்­றப் பங்­க­ளிப்­பு­க­ளை­யும் சமூக சேவை­ க­ளை­யும் மெச்­சிப் பேசி­னார் பிர­த­மர் அலு­வ­ல­க அமைச்­ச­ரும் இரண்­டாம் நிதி அமைச்­ச­ரு­மான இந்­தி­ராணி ராஜா.

“தமிழ்­மொ­ழி­ வளர்ச்­சிக்­காக அவர் ஆற்­றிய அரும்­பணி­களும் மொழி­பெ­யர்ப்­பும் என்­றும் நிலைத்­தி­ருக்­கும்,” என்றார் குமாரி இந்­தி­ராணி ராஜா.

கடந்த 30 ஆண்­டு­க­ளாக நாடா­ளு­மன்­றத்­தில் பணி­பு­ரிந்த அவர், தன்­னு­டைய பணிக் கட­மை­க­ளுக்கு அப்­பால் பல சூழல்­களில் வெளி­நாட்டு பிர­முகர்­க­ளைச் சிறப்­பு­டன் கவ­னித்­துக்­கொண்­ட­தற்­காக பல­முறை பாராட்­டுப் பெற்­றுள்­ளார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் வெளி­வந்த ‘சொல்­வ­ளக் கையேடு’ உட்­பட பல மொழி­சார் படைப்­பு­க­ளை­யும் மொழி­பெ­யர்ப்­புப் பணி­க­ளை­யும் செய்­துள்­ளார் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

“மொழி­யா­ளு­மை­மிக்க திரு பழ­னி­யப்­பன், தமிழ்­மொ­ழிக்­கா­க­வும் பல இந்­திய சமூக அமைப்­பு­க­ளுக்­கா­க­வும் தொண்­டாற்­றி­யுள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தி­ லும் அர­சாங்­கப் பணி­க­ளி­லும் முனைப்பு டன் பங்­காற்­றிய அவ­ரின் இழப்பு ஈடு செய்ய முடி­யா­தது,” என்று உள்­துறை அமைச்­ச­ரும் சட்ட அமைச்­ச­ரு­மான கா சண்­மு­கம் தமிழ்­மு­ர­சி­டம் கூறி­னார்.

“பாலா என அன்­பு­டன் அழைக்­கப்­படும் திரு.பழ­னி­யப்­பன் நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் எல்­லா­ருக்­கும் தெரிந்த, நட்­பான முகம். தமிழ் மொழி­யின் மீது ஆழ்ந்த மதிப்­பும் அன்­பும் கொண்ட சமூ­கத்­தின் மதிப்­பிற்­கு­ரி­ய­வர். அவர் தனது வாழ்­நா­ளின் பெரும்­ப­கு­தியை மொழி­யின் வளர்ச்­சிக்­காக அர்ப்­ப­ணித்­தவர்,” என்றார் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன்.

நாடா­ளு­மன்­றத்­தில் அவரது இருக்­கை­யில் அவர் நினை­வாக நேற்று மலர்ச்­செண்டு வைக்­கப்­பட்­டி­ருந்தது குறிப்பிடத்தக்கது.

“என் அப்பா செய்த பல உத­வி­களை அவ­ரது இறு­திச் சடங்­கில்­தான் நாங்­கள் தெரிந்­து­கொண்­டோம். பல தலை­மு­றை­யைச் சேர்ந்­த­வர்கள் நன்றி செலுத்­தி­யதே என் அப்பா வாழ்ந்த நல்­வாழ்க்­கை­யின் அடை­யா­ளம். நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ருக்­காக அளித்த அஞ்­சலி நெகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது,” என்று அவ­ரின் மகள் திரு­வாட்டி பத்மா பழ­னி­யப்­பன் தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content