பொழுதுபோக்கு

திரைப்படமாக உருவாக்கப்படவுள்ள மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை… நடிகர் யார் தெரியுமா?

நடனத்தால் பல கோடி ரசிகர்களை அசரடித்தவர் மைக்கல் ஜாக்சன். அவரது வாழ்க்கை இப்போது படமாகப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அசரடிக்கும் நடனத் திறமையாலும் எழுச்சிப் பாடலாலும் பல கோடி ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவர் மைக்கல் ஜாக்சன். அவரது நடனம் மீது இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் தீராத பிரியம் இருக்கிறது.

அமெரிக்காவில் 1958ம் ஆண்டு எளிய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் மைக்கல் ஜாக்சன். சிறுவயது முதலே தனது தந்தையின் இசைக்குழுவில் இணைந்து பாடி, தனது திறமையை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது குழந்தைப்பருவம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. தனது உருவத்திற்காகவும் நிறத்திற்காகவும் கடுமையாக கேலிகளைச் சந்தித்தவர் மைக்கல் ஜாக்சன்.

Michael Jackson Nephew Jaafar Jackson plays King Of Pop In Movie – Deadline

ஆனால், வளர்ந்த பிறகு இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது அசாத்திய நடனத் திறமையாலும் பாடல் வரிகளாலும் உலகில் பல ரசிகர்களைத் தன் வசப்படுத்தினார். இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு லண்டன் நகரில் மாபெரும் கச்சேரி ஒன்றில் பங்கேற்று திரும்பிய அவர் ஜூன் 25, 2009 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்நிலையில்தான் மைக்கல் ஜாக்சன் பயோ பிக் ஒன்று உருவாக உள்ளது. ஹாலிவுட்டில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். மேலும், மைக்கல் ஜாக்சனாக அவருடைய உறவினர் ஜாபர் ஜாக்சன் என்பவர்தான், மைக்கல் ஜாக்சன் கதாபாத்திரம் ஏற்று அதில் நடிக்கவுள்ளார். இந்த விஷயம் மைக்கல் ஜாக்சன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content