லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான “அன்பெனும்” பாடல் வருகின்றது….

லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான “அன்பெனும்” பாடல் எப்போது ரிலீஸாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.
படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் படம் ஸ்டைலிஷாகவும், ஆக்ஷனாகவும் வந்திருப்பது உறுதியாகியிருப்பதாக கொண்டாடுகின்றனர்.
அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
லியோ படத்துக்கான அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேறு வழியை யோசித்த படக்குழு ரிலீஸுக்கு முதல்நாள் பெய்டு ப்ரீமியர் ஷோவை திரையிடவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான நா ரெடிதான் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் வாயில் சிகரெட்டுடன் அந்தப் பாடலில் நடனம் ஆடியிருந்தார். அதேபோல் பாடல் வரிகள் முழுக்க போதையும், வன்முறையும் நிறைந்திருந்தன.
அதனையடுத்து Bad Ass என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது.
அந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் இது வேண்டுமென்றே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் வரிகளுக்கு பதிலடி கொடுப்பது போல் வரிகள் அமைக்கப்பட்டிருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்தனர். அதேபோல் பாடலில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றும் பேசினர்.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அன்பெனும் என்ற பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விஜய், த்ரிஷா போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறது.
படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள்தான் என்று முன்னர் கூறப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ரொமான்ஸ் மெலோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Metals lam keela vachitu, petals ah kaila edupom 😁
Get ready to swoon, because #Anbenum is dropping soon ❤️#LeoThirdSingle is releasing Tomorrow.. #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo… pic.twitter.com/DFbjzQMLud
— Seven Screen Studio (@7screenstudio) October 10, 2023