KH 234 – இல் இணைந்த த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது
கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் KH 234 படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. வழக்கம்போல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
த்ரிஷாவும், நயன்தாராவும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் தற்போது த்ரிஷா நடிப்பது உறுதியாகி விட்டது. படக்குழு இதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
த்ரிஷா கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் I மற்றும் II படங்களுக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைகிறார்.
இதேவேளை குறித்த படத்தில் துல்கர் சல்மான் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றிய துல்கர் சல்மானின் பயணத்தில் இந்த இணைப்பு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.
https://twitter.com/RKFI/status/1721446346480099607