Site icon Tamil News

ஹமாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இஸ்ரேலின் வரலாற்று ஆசிரியர் கைது!

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களை நியாயப்படுத்தியதாக இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் கைது செய்யப்பட்றுள்ளார்.

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத செயல்களை நியாயப்படுத்தியதாகக் கூறி மத்திய நகரமான பெட்டா திக்வாவில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்த வரலாற்று ஆசிரியர் நவம்பர் 10ம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய வீரர்கள் பாலஸ்தீனியர்களை பாலியல் வன்கொடுமை செய்யவில்லையா?. அவர்கள் 1948ம் ஆண்டிலிருந்து உள்ளனர், மேலும் இது பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லை என்று ஆசிரியர் மற்ற ஆசிரியர்களுடன் ஒரு செய்திக் குழுவில் எழுதினார்.மேலும், பொலிஸார் மற்றும் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கும் ஆன்லைன் பதிவுகளை அவர் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருமுறை இஸ்ரேலிய விமானப்படை விமானிகளை ‘குழந்தை கொலைகாரர்கள்’ என்று குறிப்பிட்டதாகவும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ராணுவத்தில் பணியாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், அவர் ஹமாஸை ஆதரிப்பது போல் எழுதியுள்ளதாக கூறி புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பெட்டா திக்வா நகராட்சி மற்றும் கல்வி அமைச்சகம், ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது. அதனை தொடர்ந்து, ஆசிரியர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.மேலும், ஆசிரியர் கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததாகவும், பாதுகாப்புப் படையினரை இழிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கார் மோதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ‘பயங்கரவாதி அல்ல’ என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version