Site icon Tamil News

தீவிரமடையும் இஸ்ரேல் போர்: முழு போர் நிறுத்தம் கோராத ஜி7 நாடுகள்

ஹமாஸை அடக்கும்விதமாக இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையாக போரை மேற்கொண்டுள்ளதாக’ கூறி இஸ்ரேலுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும்வகையில் ‘தற்காலிக போர் நிறுத்தம்’ தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதை டோக்கியோ கூட்டம் வாயிலாக இஸ்ரேலிடம் வலியுறுத்தினர்.

தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.

Exit mobile version