வட அமெரிக்கா

அமெரிக்காவின் பூங்கா ஒன்றில் கிடந்த மனித உடல் பாகங்களால் பரபரப்பு!!

அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் கிடந்த மனித உடல் பாகத்தை பள்ளி சிறுமி ஒருவர் கண்டுபிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பாபிலோன் நகரில் உள்ள சவுத்ஹார்ட்ஸ் பார்க் குளத்திற்கு அருகே சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த போது துண்டாக்கப்பட்ட மனிதனின் இடது கை பாகத்தை வியாழக்கிழமை கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தந்தை அப்பகுதியில் சோதனையிட்ட போது துண்டாக்கப்பட்ட மனிதனின் கால் பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

உடனடியாக சிறுமியின் தந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.இதையடுத்து பார்க்கின் இலை குவியல்களில் இருந்து மீதமுள்ள உடல் பாகங்களை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் ஆண் ஒருவரின் உடல் பாகமாக இருக்கலாம் என்றும், ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் அனைத்தும் ஒரே நபருடையதா என்று தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content