வாழ்வியல்

ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறும் Energy Drinks

இன்றைய காலகட்டத்தில், பலருக்கு ஆரோக்கியமாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது.

எனினும், ஆர்வக்கோளாறு காரணமாக, சில சமயங்களில் தவறான உணவுகளை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். உடலுக்கு நல்லது என்று நாம் நினைக்கும் பல பொருட்கள், உண்மையில் ஆரோக்கியத்தை காலி செய்யும் விதமாக உள்ளன என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

சமீப காலத்தில் வெளியிடப்பட்ட பல மருத்துவ அறிக்கைகள், எனர்ஜி பானங்கள் குறித்து எச்சரிக்கைகளை விடுத்திருந்தன. ஆற்றல் கிடைக்க வேண்டும் என நாம் அருந்தும் எனர்ஜி பானங்கள், ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் (Health Tips) என்பதை பற்றி, ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள்

1. எனர்ஜி பானங்கள் காரணமாக இதயத்துடிப்பு சீராக இருக்காது என்றும், இதனால் சில சமயங்களில் இதய செயலிழப்பு ஏற்படும் அபத்துக் கூட ஏற்படலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கிறார்.

2. எனர்ஜி ட்ரிங்க் என்னும் ஆற்றல் பானங்கள், நம் இருதய அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கிறார். இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்தை இவை கணிசமாக அதிகரிக்கிறது என்கிறார் அவர்

3. எனர்ஜி பானங்களை தொடர்ந்து அருந்துவதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

4. ஆற்றல் பானங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது மன பதற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

5. ஆற்றல் பானங்களை அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. இதனால் தான் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. அளவிற்கு அதிக சர்க்கரை காரணமாக உடல் பருமன், டைப் 2 வகை நீரிழிவு நோய் அபாயம் பெரிதளவு அதிகரிக்கும்.

6. மிகக் குறைந்த pHஅளவு மற்றும் அளவிற்கு அதிக சர்க்கரை காரணமாக பற்களின் ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும்.

7. மிக முக்கியமாக எனர்ஜி பானங்கள், போதை தரக்கூடியது. இதனால் மீண்டும் மீண்டும் குடிக்கும் ஆர்வம் ஏற்படும். எனவே இதற்கு அடிமையாகும் வாய்ப்பும் மிக அதிகம் என ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கிறார்.

மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

எனர்ஜி பானங்களின் மீதான ஆர்வத்தை குறைக்க அல்லது தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை

1. ஆற்றல் பானங்களுக்கு பதிலாக, இளநீர் போன்ற இயற்கையாக ஆற்றல் வழங்கும் பானங்களை உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும்.

2. ஆற்றலை கொடுக்க காஃபின் சேர்ப்பது அவசியம் என்று நீங்கள் நினைத்தால், குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட லைட்டான காபி அருந்தலாம்.

3. ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் காய்கறிகளின் ஜூஸ், குறிப்பாக பீட்ரூட் ஜூஸ், வெள்ளரி ஜூஸ் போன்றவை பெரிதும் கை கொடுக்கும்.

4. கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பால், ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் இயற்கை பானங்களில் ஒன்று.

5. பருவகால பழங்களின் ஜூஸ்களை வருந்துவதும், ஆற்றலை பெற சிறந்த வழி.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content