அமெரிக்க பேராசிரியர் கிளாடியாவுக்கு பொருளாதார நோபல் பரிசு!
நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“தொழிலாளர் சந்தையில் (labour market) பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக” கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
1946-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த க்ளாடியா கோல்டின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
இவரது ஆராய்ச்சி 200 ஆண்டுகளாக தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு எப்படி மாறியுள்ளன என்பதையும் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி உள்ளன என்பது பற்றிய தரவுகளை வழங்கியுள்ளது என நோபல் பரிசு வழங்கும் தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.