புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நவரசத்தையும் முகத்தில் காட்டும் 90’s கிட்ஸ் பிரபலம்… இவங்கள மறந்துட்டீங்களா?

தமிழ் சினிமாவில் ரகுவரனின் மகளாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஹேமலாதா. பூவே உனக்காக, சூரியவம்சம் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், காதல் கொண்டேன் மதுர, ஜி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான அடைக்கலம் படத்தில் நடித்திரந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனக் கலைஞராகவும் அறியப்பட்ட ஹேமலதா கடந்த 1999-ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகாவின் ஹிட் தொடர் சித்தி சீரியலில் அறிமுகமானார்.

இந்த சீரியலில் காவேரி என்ற கேரக்டரில் வந்த இவர் பலரின் பாராட்டுக்களை பெற்றார். அதன்பிறகு மனைவி என்ற தொடரில் நடித்த இவர், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் ராகவி என்ற கேரக்ரில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

விஜய் டிவியின் பிரபலமான தொடரான கனா காணும் காலங்கள் தொடர் 2 சீசன்கள் முடிந்த போது 3-வது சீசனாக கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற பெயரில் ஒளிபரப்பானது. கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை மையமாக கொண்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சன்டிவியின மகள், விஜய் டிவியின் அன்பே வா தொடரில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவரை மக்கள் மத்தியில் கொண்ட சென்ற மற்றொரு சீரியல் தென்றல். இந்த சீரியலில், தீபா பிரபாகர் கேரக்டரில் நடித்த இவருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

தற்போது இவர் சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை வெளியிட்டு வருகிறார் அவ்வாறு இவர் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content