Android கையடக்க தொலைபேசிகளுக்கு அறிமுகமான ChatGPT
OpenAI நிறுவனம் ChatGPT-3.5 வெர்ஷனை, Android பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.
இனி இதனால் கையடக்க தொலைபேசி மற்றும் டேப்லெட்டுகளில் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
இதன் தற்போதைய சிறப்பு என்னவென்றால், இதுவரை ChatGPT-ஐ பிரவுசரில் மட்டுமே பயன்படுத்தும்படியாக இருந்து வந்த நிலையில், தற்போது Android பயனர்களும் செயலி வடிவில் அதைப் பயன்படுத்தும் வகையில் OpenAI வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது ChatGPT பல கோடிக் கணக்கானப் பயனர்கள் அணுகக்கூடிய வகையில் மாற்றம் பெற்றுள்ளது.
நீங்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலோ அல்லது உங்களுக்கு உயர் மட்டத்தில் இருக்கும் நபருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றாலோ சில நிமிடங்களிலேயே ChatGPT உதவியுடன் உங்களால் அதைச் செய்ய முடியும். மேலும் நீங்கள் எது தொடர்பான கேள்வி கேட்டாலும் உங்களுக்கான பதில்களை சிறப்பான முறையில் இந்த செயலி கொடுத்துவிடும்.
குறிப்பாக இந்தத் தொழில்நுட்பத்தை டிஜிட்டல் மீடியா கன்டெண்ட் கிரியேட்டர்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர்.
பதிவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருமே இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்டுரைகள், வலைப்பதிவுகள் என அனைத்தையும் சிரமமின்றி உருவாக்குகின்றனர்.
ChatGPT Android மட்டும் iOS பதிப்பில் பல முக்கிய வேறுபாடுகள் உள்ளது. நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களால் தற்போது ChatGPT Plus சந்தா திட்டத்தில் சேர முடியாது.