ஐரோப்பா

பிரித்தானியாவில் NHS கட்டமைப்பை மீட்டெடுக்க தொழிற்கட்சி முன்னெடுத்துள்ள புதிய திட்டங்கள்!

  • November 13, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் NHS தோல்வியடைந்துள்ளதாக  விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரத்து செய்யப்பட்ட ஊதிய உயர்வுகள் அல்லது விஷயங்களை மாற்றாத மேலாளர்களை பணிநீக்கம் செய்வது  உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் புதிய நடவடிக்கைகளை உறுதிப்படுத்துகிறார், தோல்வியுற்ற மருத்துவமனை அறக்கட்டளைகளை அதிகரிக்கவும் வெற்றிகரமானவற்றை ஊக்குவிக்கவும் அவர் நம்புகிறார். காத்திருப்புப் பட்டியலை “18 மாதங்களில் இருந்து 18 வாரங்களாக” குறைப்பதற்கான தொழிற்கட்சி அரசாங்கத்தின் உத்தியின் ஒரு […]

பொழுதுபோக்கு

தமிழகத்தில் மட்டும் 100 கோடியை கடந்த அமரன்

  • November 13, 2024
  • 0 Comments

ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையகமாக வைத்து எடுக்கப்பட்ட, இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள அமரன் படம் உலகளவில் இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் […]

செய்தி

பாகிஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 14 பேர் மரணம்!

  • November 13, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இண்டஸ் ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.கில்கிட் பால்திஸ்தான் மாநிலத்தில் புதன்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்தது. மொத்தம் 27 பேர் அந்தப் பேருந்தில் பயணம் செய்ததில் ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 12 பேரைத் தேடும் பணி தொடருவதாக மாநில அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. மிதமிஞ்சிய வேகத்தில் பேருந்து சென்றதால் அதன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதனைத் தொடர்ந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

  • November 13, 2024
  • 0 Comments

வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகியுள்ளார். விழுங்கிய நிலையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் ரக போதைப்பொருளைக் கடத்திவந்த வெளிநாட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் சியேரா லியோனைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரால் விழுங்கிய நிலையில் கடத்திவரப்பட்ட கொக்கேய்ன் அடங்கிய 56 வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையில் நாளை தேர்தல் – 350,000ற்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களில்!

  • November 13, 2024
  • 0 Comments

இலங்கையில் நாளை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் 350,000ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை தபால் நிலையங்களில் தேங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை தற்போது வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றைய தினமும் அஞ்சல் நிலையத்துக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க […]

ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள அச்சம் – நாட்டில் அமைதியின்மை ஏற்படும் அபாயம்

  • November 13, 2024
  • 0 Comments

நியூசிலாந்தில் காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நடத்த தீவிரவாத குழுக்கள் தயாராகி வரும் நிலையில், காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆபத்தான செயல்கள் குறித்து நியூசிலாந்து அதிகாரிகளும் சமூக தலைவர்களும் கடும் கவலை தெரிவித்துள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு நாட்டில் அமைதியின்மை அச்சத்தை தூண்டும் வகையில் கனடாவில் ஏற்பட்டுள்ள சவால்களை போன்ற சவால்களை நாடு எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் எச்சரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1984ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சில குழுக்கள் வெளிப்படையாகக் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் விவேக் ராமசாமி – எலோன் மஸ்க்கிற்கு முக்கிய பதவிகளை வழங்கும் டிரம்ப்

  • November 13, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப் முக்கியப் பதவிகளுக்குத் தலைவர்களை அறிவித்து வருகிறார். அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக Fox தொலைக்காட்சிப் படைப்பாளர் பீட் ஹெக்செத் அறிவிக்கப்பட்டார். அவர் முன்பு அமெரிக்க ராணுவத்தில் சேவையாற்றியவர். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்குத் மைக்கல் வால்ட்ஸ் , மத்தியக் கிழக்குத் தூதராக ஸ்டீவ் விட்கொஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஸ்டீவ் விட்கொஃப் சொத்துச் சந்தைத் தொழிலதிபராகும் புதிதாக அமைக்கப்படும் அரசாங்கச் செயல்திறன் அமைச்சுக்கு X சமூக ஊடகத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க்கையும், ஜனாதிபதி […]

வாழ்வியல்

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

  • November 13, 2024
  • 0 Comments

உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இது ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன. எனினும், […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

சமூக ஊடகங்களில் உலகில் மிகவும் பிரபலமான நாடுகள் – முதலிடம் பிடித்த ஜப்பான்

  • November 13, 2024
  • 0 Comments

சமூக ஊடகங்களில் உலகில் மிகவும் பிரபலமான நாடுகள் குறித்த சமீபத்திய அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. Time Out இதழ் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது, மே 2021 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் கூகுள் தேடல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் ஆகியவற்றின் தரவுகளை பகுப்பாய்வு செய்து டைட்டன் டிராவல் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின் விளைவாக இந்த தரவரிசை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . அதன்படி, தரவரிசையில் முதலிடத்தை ஜப்பானும், இரண்டாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன. இப்பட்டியலில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளில் இந்த 6 வார்த்தைகளை தேடினால் ஆபத்து

  • November 13, 2024
  • 0 Comments

இணையத்தை அதிகமாக பயன்படுத்துபவர்கள் மற்றும் கூகுள் போன்ற தளங்களில் தகவல்களை தேடுபவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை வந்துள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான SOPHOS, தங்கள் கணினியின் தேடுபொறியில் குறிப்பிட்ட வார்த்தைகளை உள்ளிடும் பயனர்களை குறிவைத்து ஒரு புதிய ஹேக்கிங் உத்தி செயல்படுவதாக எச்சரித்துள்ளது. ஆறு குறிப்பிட்ட சொற்களை கூகுளில் தேடுவதற்கு எதிராக SOPHOS இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏனெனில் இவ்வாறு செய்வது இணைய தாக்குதல்களின் ஆபத்தை அதிகரிக்குமாம். உதாரணமாக, “பெங்கால் பூனைகள் ஆஸ்திரேலியாவில் […]