மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆணின் சடலம்
கண்டி காவல் பிரிவுக்குட்பட்ட பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் மிதந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. காவல்துறையினரின் கூற்றுப்படி, உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாகவும், இறந்தவர் நீல நிற டி-சர்ட் மற்றும் நீல நிற டெனிம் பேன்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் கண்டி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.