மீண்டும் மகனுடன் இணையும் ரவி – இயக்குனராக எடுக்கும் அவதாரம்
சமீபகாலமாக ரவி மோகன் நடிப்பில் வெளியாகி வரும் எந்தப் படமும் பெரியளவிற்கு ஹிட் கொடுப்பதில்லை. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த பிரதர் படம் வெளியாகி பெரியளவில் ஓடவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த காதலிக்க நேரமில்லை படமும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதுவரையில் சோலோவாக நடித்து வந்த ரவி மோகன் இப்போது ஹிட் கொடுக்க இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் இணைந்துள்ளார். […]