பொழுதுபோக்கு

கமல் பேசவில்லை என்று கூறி அழுத மனோபாலா

  • May 11, 2023
  • 0 Comments

பிரபல நடிகை சுஹாசினி மனோபாலா பற்றி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், கமல் ஹாசன் மூலமாக தான் மனோபாலா சினிமாவில் அறிமுகமானார். இவர்கள் இருவரும் சிறிது காலம் பேசிக்கொள்ளவில்லை. மேலும் மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல் ஹாசன் போக மாட்டார். ஒரு நாள் மனோபாலா வந்து, ” உன்னுடைய சித்தப்பா எல்லாரிடமும் பேசுகிறார்.ஆனால் சில என்னுடன் மட்டும் பேசமாட்டார் என்று அழுததாக நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் படுக்கை அறைக்குள் விழுந்த விண்கல் – தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

  • May 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை மீது விண்கல் தாக்கியுள்ளது. அது வீட்டின் படுக்கை அறைக்குள் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோப்வெல் டவுன்ஷிப் என்ற இடத்தில் எட்டா அக்வாரிட்ஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய விண்கல் மழையுடன் தொடர்புடைய கல் ஒன்று விழுந்ததாகக் கூறப்படுகிறது. Eta Aquariids விண்கல் மழை என்பது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். தற்போது வீட்டின் மேற்கூரையைத் துளைத்த அந்தக் கல், படுக்கை அறையில் விழுந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். விண்கல் விழுந்த […]

ஆசியா

சிங்கப்பூருக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக இந்தோனேசியாவில் தரையிறக்கம்!

  • May 11, 2023
  • 0 Comments

சிங்கப்பூருக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், 6E 1007 என்ற எண் கொண்ட விமானம், நேற்று (மே 09) மாலை 06.50 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள், விமான ஊழியர்களுடன் புறப்பட்டது. நடுவானில் விமானம் சென்றுக் கொண்டிருந்த நிலையில், விமானத்தில் ‘கருகிய வாசனை’ வருவதை உணர்ந்த […]

வாழ்வியல்

ஆண்களை தாக்கும் ஆபத்தான நோய்கள் பற்றி தெரியுமா?

  • May 11, 2023
  • 0 Comments

இந்த நோய்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளிலும் இவை தெரிவதில்லை. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், ஆபத்தாக மாறும். ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தான சைலண்ட் கில்லர் நோய்கள். விதைப்பை புற்றுநோய் (புரோஸ்டேட் கேன்சர்) ஏன் கவலைப்பட வேண்டும்: புரோஸ்டேட் கேன்சர் ஆண்களிடையே மிக அதிக அளவில் ஏற்படும் நோயாகிவிட்டது. 15% ஆண்களுக்கு ஏற்படுவதாக தெரிகிறது. பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குத்தான் தோன்றுகிறது. ஆனால் சமீப காலங்களில் இது 35 […]

விளையாட்டு

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை – நேரடியாக தகுதி பெற்ற அணி

  • May 11, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்க அணி ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு, சூப்பர் லீக் புள்ளிகளின் அடிப்படையில் நேரடி தகுதி பெற்றது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அந்த தொடருக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 8-வது அணியாக நேரடி தகுதி பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் லீக் புள்ளிகளின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணி நேரடி தகுதி பெற்றுள்ளது. முன்னதாக அயர்லாந்து மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீரென மாயமான சிறுவன் – பனியைச் சாப்பிட்டு தப்பிய அதிசயம்

  • May 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் 8 வயதுச் சிறுவன் வெறும் பனியைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார். Nante Niemi எனும் அந்தச் சிறுவன் கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் மாநிலப் பூங்காவிலுள்ள ‘Porcupine Mountains’ பகுதியில் முகாமிடச் சென்றபோது காணாமல்போனார். விறகுகளைச் சேகரிக்கப் போனபோது அவர் காணாமல்போனதாகவும் அவரைத் தேடும் முயற்சியில் 150 பேர் களமிறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் கடந்த திங்கட்கிழமை முகாமில் இருந்து 2 மைல் தூரத்தில் மரக்கட்டை ஒன்றின் அடியிலிருந்து மீட்கப்பட்டதாக மாநில பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் […]

இலங்கை

நுவரெலியாவில் செல்பவர்களுக்கு மகிழ்ச்சி – அறிமுகமாகும் கேபிள் கார் திட்டம்

  • May 11, 2023
  • 0 Comments

நுவரெலியாவில் கேபிள் கார் (Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை […]

ஐரோப்பா

பிரான்ஸில் உணவிற்காக நடந்த குழு மோதல் – மூவருக்கு நேர்ந்த கதி

  • May 11, 2023
  • 0 Comments

பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தின் அருகே இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு 10.20 மணி அளவில் Jean-Paulhan alley பகுதியில் குழு மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் அழைக்கப்பட்டனர். வீதியில் செண்ட்விச் விற்பனை செய்யும் ஒருவரிடம் இருந்து நபர் ஒருவர் செண்ட்விச் ஒன்றை திருட முற்பட்டதாகவும், அதை அடுத்தே மோதல்கள் ஆரம்பமானதாகவும் அறிய முடிகிறது. இருவருக்கிடையே ஆரம்பித்த மோதல், பெரும் கலவரமாக மாறி குழு மோதலாக வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் மூவர் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – பாதுகாப்பற்ற நிலையில் மக்கள்

  • May 11, 2023
  • 0 Comments

ஜெர்மனிய நாட்டில் அதிகரித்து வருகின்ற கத்தி குத்து சம்பவங்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனியில் கத்தி குத்து சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் அண்மை காலங்களில் இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களால் பலியாகியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகின்றது. அதாவது பொது வெளியில் மக்கள் பணிப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்ற கருத்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தனால் நோற்றின்பிஸ்பாளின் மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்கட்சியான எஸ்பிடி கட்சி யானது பாராளுமன்றத்தில் ஒரு […]

இலங்கை

இலங்கையில் வட்டிவீதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • May 11, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவருகின்றது. இந்த நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர், சந்தை […]