இலங்கை

உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் அமைக்க ஜனாதிபதி உறுதி!

  • May 12, 2023
  • 0 Comments

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த  மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார். காலநிலை மாற்றம் உலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தாலும், அதை ஆய்வு செய்வதற்கு மத்திய ஆய்வு மையம் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, இந்த முயற்சியில் இலங்கையுடன் […]

இலங்கை

ஆசிரியையின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்!

  • May 12, 2023
  • 0 Comments

வவுனியா  ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டது. குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வவுனியா மாவட்ட […]

இலங்கை

மீண்டும் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் எயார் சைனா!

  • May 12, 2023
  • 0 Comments

சீன விமான சேவை நிறுவனமான எயார் சைனா ஜூலை மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள  தகவலின்படி ஏயார் சீனா ஆரம்பத்தில் வாரத்துக்கு மூன்று விமான சேவைகளை இயக்கும் என தெரிய வருகிறது.

இலங்கை

சீமெந்தின் விலை குறைவடைய வாய்ப்பு!

  • May 12, 2023
  • 0 Comments

அடுத்த வாரம் முதல் சீமெந்தின் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,750 ரூபாவாக உள்ளது. எவ்வாறாயினும் அடுத்த வாரம் ஒரு மூடை சீமெந்து விலையில் கணிசமான அளவு குறையும் என எதிர்பார்ப்பதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

செய்தி தமிழ்நாடு

திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

  • May 12, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பனையப்பட்டி அருகே வீரணாம்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் சந்தனக்காப்பு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வெகு விமர்சையாக  நடைபெற்றது. இந்தப் போட்டியில் 350 காளைகள் 60 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் தாலுக்கா […]

மத்திய கிழக்கு

விவாகரத்தாகி விட்டது திருமண அல்பம் வேண்டாம் .. புகைப்பட கலைஞரிடம் காசை திருப்பி கேட்ட பெண்!

  • May 12, 2023
  • 0 Comments

நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் டர்பனை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. எல்லார் திருமணத்தை போலவும் இவர்களுடைய திருமணத்திற்கும் புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். […]

பொழுதுபோக்கு

கமல் வீட்டு வாசலில் கால்கடுக்க காத்திருந்த ரஜினி!! இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்

  • May 12, 2023
  • 0 Comments

அபூர்வ ராகங்கள் படம் எடுக்கும் போது, கமல் ஹாசன் வீட்டு வாசலில் ரஜினிகாந்த் காத்திருந்த சம்பவம் தொடர்பில் நடிகை சுஹாசினி தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அந்தப் படத்தின் சமயத்தில் கவிதாலயா நிறுவனத்தின் காரில்தான் படத்தில் நடிப்பவர்கள் அழைத்து வரப்படுவார்கள். முதலில் கார் ஸ்ரீவித்யாவை ஏற்றிக்கொண்டு பிறகு கமல் ஹாசனின் வீட்டுக்கு செல்லும். கார் வரும்வரை கமல் ஹாசன் தூங்கிக்கொண்டுதான் இருப்பார். ஸ்ரீவித்யா வந்தால் நேராக கமலின் வீட்டுக்குள் சென்று காபி சாப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த சமயத்தில் […]

செய்தி தமிழ்நாடு

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

  • May 12, 2023
  • 0 Comments

ஆலங்குடி அருகே பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவிட்டு பின்னர் மண் அள்ளுமாறு கூறி திமுகவைச் சேர்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் தனி நபராக அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியகுளம் 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளமாகும். இந்ந குளத்தில் கடந்த 15 நாட்களாக அரசு அனுமதியுடன் விவசாயப் பயன்பாட்டிற்காக […]

இலங்கை

பாடசாலை மாணவியின் குடிநீர் போத்தலுக்குள் கலந்திருந்த சிறுநீர்!

  • May 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சியில் முன்னணி கலவன் பாடசாலையொன்றில் கல்விகற்கும் மாணவியின் குடிநீர்ப் போத்தலில் சிறுநீர் கலந்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், கடந்த 9ஆம் திகதி நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சிறுநீர் கலந்திருப்பதை அறியாத மாணவி அதனை பருகியுள்ளார். நீரை பருகிய போது அதில் வித்தியாசத்தை உணர்ந்த மாணவி சந்தேகமடைந்து, குடிநீர் போத்தலை ஆசிரியையிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார். தனது குடிநீரின் நிறம் மாறியுள்ளதுடன், குடிநீர் அளவும் அதிகரித்திருந்ததாக மாணவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆசியை குடிநீரை […]

இந்தியா

ரோட்டில் நின்ற பைக்கிலிருந்து பெட்ரோலை திருடி அதே பைக்கிற்கு தீ வைத்த பெண்!(வீடியோ)

  • May 12, 2023
  • 0 Comments

டெல்லியில் பெண் ஒருவர் பைக்கில் இருந்து பெட்ரோலை வெளியேடுத்து, அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியின் தென்கிழக்கு மாவட்டமான ஜெய்த்பூரில், பெண் ஒருவர் ரோடுடில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்றில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, அதே வாகனத்தை தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே பெண் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு வாகனத்தை தீயிட்டு கொளுத்த முற்பட்ட போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது […]