மத்திய கிழக்கு

துருக்கி அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு தீவிரம்

  • May 14, 2023
  • 0 Comments

துருக்கி தாயீப் எர்டோகன் (69). இவர் 2003ம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சியை செய்து வருகிறார். 2003ம் ஆண்டு துருக்கி பிரதமரான எர்டோகன் 2014 ஆகஸ்ட் வரை வரை பிரதமராக செயல்பட்டார். துருக்கியில் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு உச்சபட்ச அதிகாரமாக அதிபர் பதவி கொண்டுவரப்பட்டது. இதையடுத்து 2014 ஆகஸ்ட் மாதம் எர்டோகன் துருக்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 9 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கி அதிபராக செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்த அதிகாரமும் தன்வசம் கொண்டுள்ள எர்டோகன் […]

பொழுதுபோக்கு

“வாத்தி” வெற்றியுடன் இணைந்த மற்றுமொரு கூட்டணி

  • May 14, 2023
  • 0 Comments

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இந்த நிலையில் தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 8 பேர் பாதிப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

இலங்கையில் கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16853 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேலும் 2 கொவிட் -19 மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை  கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதன்படி  இலங்கையில் 67,2283 பேர் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

திருமணமே செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இஞ்சி இடுப்பழகி

  • May 14, 2023
  • 0 Comments

நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பிறகு அவர் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான நிலையில் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் நடிகை இலியானா புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரோ நீபோன் […]

இலங்கை

காணாமல் போனதாக கூறப்பட்ட 4 சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • May 14, 2023
  • 0 Comments

காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று (14) அதிகாலை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேச பொலிஸ் நிலையத்தில் வினவிய போது காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் இன்று (14) காலை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நான்கு சிறுவர்களின் தாய்களில் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கை

ஆளுநர்கள் பதவி விலகாவிடின், பதவி நீக்கப்படுவார்கள் என அறிவி்ப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

ஜனாதிபதி அலுவலகத்தினால் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட நான்கு ஆளுநர்கள் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்யாவிடின்,  அவர்களை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். ஏற்கனவே அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்துக்கு முன்பாக ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதே போன்று குறித்த நான்கு ஆளுநர்களின் இடத்துக்கு புதிய ஆளுநர்களாக நவீன் திசாநாயக்க, செந்தில் தொண்டமான்,  தயா கமகே […]

செய்தி தமிழ்நாடு

கோவில் உண்டியலை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

  • May 14, 2023
  • 0 Comments

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பதை கோயில் காவலாளி ஒருவர் பார்த்தார்.நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து. பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.அவர்கள் இந்த […]

இலங்கை

யாழ் இளைஞனுக்கு துபாயில் நேர்ந்த கொடூரம்..!

  • May 14, 2023
  • 0 Comments

குடும்ப வறுமையால் யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு சகோதரர்கள் வேலைக்காக சென்றிருந்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மற்றைய சகோதரனை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் மற்றும் அவருடைய சகோதரரான 22 வயதுடைய கமலதாஸ் டிலக்சன் ஆகியோர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துபாய்க்கு […]

செய்தி தமிழ்நாடு

மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி

  • May 14, 2023
  • 0 Comments

திருப்பத்தூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை இணைந்து நெகிழி இல்லா திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கவும் அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று காலை 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மினி மராத்தான் போட்டி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. என்ன மராத்தான் போட்டியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன். திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா […]

மத்திய கிழக்கு

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான சூடானின் மிகப்பெரிய பாடகி

  • May 14, 2023
  • 0 Comments

சூடானின் மிகப்பெரிய பாடகர்களில் ஒருவரான ஷேதன் கார்டூட்(37) துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூடான் ராணுவத்திற்கு துணை ராணுவப்பிரிவுக்கும் இடையேயான மோதலில் பாடகி கார்டூட் கொல்லப்பட்டுள்ளார் என்றே கூறுகின்றனர். சூடானில் இரு பிரிவினருக்குமான மோதலில் சிக்கிக்கொண்டுள்ள பொதுமக்களின் துன்பத்தைப் போக்க ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே பாடகி துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ஏப்ரல் மாதம் தொடங்கி சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் பிரிவுக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. […]