களுத்துறை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இன்று (07) காலை களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த யுவதி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று (06) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்த குறித்த குழுவினர், தமது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து குறித்த விடுதியில் […]