இலங்கை செய்தி

மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த சந்தேக நபரை கைது செய்ய 2 குழுக்கள்

  • May 8, 2023
  • 0 Comments

களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவி களுத்துறை, பலதொட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மாணவனுடன் விடுதிக்கு சென்றதாக கூறப்படும் இளைஞனும் யுவதியும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி டி.கே.வேணுரஜித் […]

பொழுதுபோக்கு

வசூலில் வரலாற்றுச் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் -2!!

  • May 8, 2023
  • 0 Comments

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் திகதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் -2 படம் மாபெரும் சாதனையை படைத்து வருகின்றது. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் […]

செய்தி விளையாட்டு

ஐபிஎல் தொடரின் மற்றொரு முக்கியமான போட்டி இன்று

  • May 8, 2023
  • 0 Comments

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மற்றுமொரு போட்டி இன்று (08) நடைபெறுகிறது . இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடன் இடம்பெறுகிறது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (08) இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது . இதேவேளை நேற்று (07) நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சன்ரைஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் வெற்றிபெற முடிந்தது.

இந்தியா செய்தி

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்து

  • May 8, 2023
  • 0 Comments

இந்திய விமானப்படைக்கு சொந்தமான MIG 21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயிற்சிப் பயணத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராஜஸ்தானின் ஹனுமன்கர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் வீட்டில் இருந்த 3 பேர் பலியாகினர் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானபோது விமானி அங்கிருந்து குதித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா விளையாட்டு

கொல்கத்தா அணிக்கு 179 ஓட்ட வெற்றியிலக்கை நிர்ணயித்த பஞ்சாப்

  • May 8, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிரப்சிம்ரன் சிங் 12 ரன், லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன், ஜிதேஷ் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். நெருக்கடிக்கு மத்தியிலும், […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

டெலிகொம் பங்குகள் விற்பனை செய்யப்படாது என அறிவிப்பு!

  • May 8, 2023
  • 0 Comments

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படமாட்டாது என நிதியமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு திறைசேரி அனுமதியளிக்காது என உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் SLT,  PLC இன் வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தின் 49.50 சதவீத பங்குகளை திறைசேரி வைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் திறைசேரியிடம் உள்ள […]

இலங்கை

நாளை கூடுகிறது அரசியல் அமைப்பு பேரவை!

  • May 8, 2023
  • 0 Comments

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) நண்பகல் 12 மணிக்கு கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்களின் நியமனங்களை தாமதப்படுத்துவது வீண் செயல் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே அந்த ஆணைக்குழுக்களை விரைவில் […]

ஆசியா உலகம்

276 நாட்களுக்குப் பிறகு சீன விண்கலம் பூமியில் தரையிறங்கியது!

  • May 8, 2023
  • 0 Comments

276 நாட்கள் விண்வெளியில் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது. இந்த ஆளில்லா விமானம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும்  இந்த ஆய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி மத்திய கிழக்கு

ஓமானில் சித்திரவதைகளை அனுபவிக்கும் 74 பெண்கள் இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை!

  • May 8, 2023
  • 0 Comments

ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்குள்ளாகி இலங்கை தூதரகத்தில் 74 பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர். குறித்த பெண்கள் 9 மாதங்களாக சிக்கியுள்ள நிலையில், தங்களை நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பணிப் பெண்கள் வீட்டின் உரிமையாளர்களால் அடித்தும்,  நெருப்பால் சூடு வைத்தும் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதைகளை எதிர்கொண்டு இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,  […]

ஆப்பிரிக்கா

காங்கோ:கனமழை வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 400ஆக அதிகரிப்பு

  • May 8, 2023
  • 0 Comments

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் […]

Skip to content