ஆப்பிரிக்கா

சூடானில் உள்நாட்டு போர் : அமைதி பேச்சுவார்த்தை தோல்வி!

  • May 9, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சண்டை தொடர்ந்தபடி இருந்தது. சண்டையை நிறுத்தி விடு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.  இதற்கிடையே இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் […]

இலங்கை

கல்முனையில் காணாமல் போன மாணவன் வெள்ளவத்தையில் மீட்பு !

  • May 9, 2023
  • 0 Comments

துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு திங்கட்கிழமை(8) மாலை குறித்த மாணவன்சகோதரியினால் மீட்கப்பட்டு தற்போது பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை தலைமையக பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். மேற்படி சம்பவத்தில் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம்-10 இல் கல்வி பயிலும் 15 […]

பொழுதுபோக்கு

மீண்டும் கிளம்பியது “ஷிவானி – பாலாஜி” தொடர்பான கிசு கிசு

  • May 9, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிலபலமடைந்த நடிகை ஷிவானி தனது 22 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு 5 ஸ்டார் ஓட்டலில் பார்ட்டியும் கொடுத்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளராக பாலாஜி முருகதாஸ் உடன் ரகசிய காதலில் இருப்பதகாவும் இருவரும் டேட்டிங்கிற்காக வெளியில் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி எட்டிப்பார்த்தது. இந்த நிலையில், பிறந்தநாள் பார்ட்டிக்கு அவருடன் கிசுகிசுக்கப்பட்ட பாலாஜி முருகதாஸு நெருக்கமாக உட்கார்ந்த படி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த […]

இலங்கை

தொடர்ந்து வலுவடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

  • May 9, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில்,  அமெரிக்க டொலரின் விற்பனை விலை 325.95 ரூபாவாகவும்,  கொள்வனவு விலை 311.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை  யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன்  பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது. இதன்படி  யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி […]

மத்திய கிழக்கு

பாலஸ்தீனியாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்; 12 பேர் பலி

  • May 9, 2023
  • 0 Comments

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையேயான நீண்டகால போரானது அவ்வப்போது தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம், பாலஸ்தீன உண்ணாவிரத போராட்ட பிரபலம் காதர் அட்னன் மரணம் அடைந்த நிலையில், அந்நாட்டில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டன.எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு, இஸ்ரேல் காவலில் கைதியாக வைக்கப்பட்டார் என்பதற்காக, அட்னன் ஏறக்குறைய 87 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் முடிவில் அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து கடந்த வாரம் […]

பொழுதுபோக்கு

தொடர் வெற்றியால் இமயம் தொட்டது கவின் சம்பளம்!! தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்கள்

  • May 9, 2023
  • 0 Comments

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து ஹிட் அடித்த நடிகர் நடிகைகளுள் கவினும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டாடா படம் மெகா ஹிட் ஆனது. இதனால் கவினின் சம்பளமும் இமயம் தொட்டது. இவர் பெரிய இசையமைப்பாளர், பெரிய நடிகை என கமிட் செய்ய கவின் முயற்சிக்கின்றார். இந்த நிலையில் கவினை வைத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க ஒரு கோடி சம்பளம் பேசியுள்ளனர். ஆனால், கவின் சம்பளமாக 2 கோடி கேட்கின்றாராம். அந்த தயாரிப்பு […]

உலகம்

அணுசக்தியின் எதிர்காலம் குறித்து பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள கருத்து!

  • May 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் அணுசக்தி துறையில் பரட்சியை ஏற்படுத்தும் வகையில், புதிய அணுமின் நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸால்  வயோமிங்கில் உள்ள கெம்மரரில் புதிய அணுமின் நிலையத்தைத் திறக்கப்படவுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அமெரிக்க எரிசக்தி சுதந்திரத்தை ஆதரிப்பதற்கும் இந்த ஆலை துணை புரியும் நம்பப்படுகின்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  “அணுசக்தி, நாம் அதைச் சரியாகச் செய்தால், நமது காலநிலை […]

இலங்கை

பாதுக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை- குற்றவாளிகள் கைது

  • May 9, 2023
  • 0 Comments

பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் கட்டட பணியாளர் ஒருவருடன் வசித்து வந்த காதல் மனைவி எனக் குறிப்பிடப்படும் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் பெண் சந்தேக நபர், குறித்த கட்டட பணியாளரின் முன்னாள் மனைவி என்றும் மற்றயவர் அவரின் தம்பி என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண் சந்தேகநபர் […]

இலங்கை

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் தமிழ் கைதிக்கு கொலை மிரட்டல் விவகாரம் : அமைச்சருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

  • May 9, 2023
  • 0 Comments

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து தமிழ்க் கைதி ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி லொஹான் ரத்வத்தை வரும் 14 ஆம் திகதி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை,  அங்கிருந்த தமிழக் கைதி […]

ஆசியா

பாக். சிறையில் இந்திய மீனவர்ஒருவர் மரணம் – 199 பேரை விடுதலை செய்ய அரசு முடிவு

  • May 9, 2023
  • 0 Comments

எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையி்ல் வருகிற 12ம் திகதி 199 இந்திய மீனவர்களை […]

Skip to content