பாடசாலையின் முதலாவது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுமி!
கண்டியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலையின் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். கட்டுகஸ்தோட்டை களுகமுவ வத்த பிரதேசத்தில் வசிக்கும் மாணவியே இவ்வாறு நேற்றைய தினம் பாடசாலையின் முதலாவது கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த குறித்த சிறுமி கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் […]