சிங்கப்பூரில் மறைந்த ஆ.பழனியப்பனுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்
சிங்கப்பூரில் மறைந்த நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் சமூக சேவையாளருமான ஆ. பழனியப்பனின் சேவைகளைப் போற்றி நாடாளுமன்றத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மே 4ஆம் தேதி 73 வயதில் காலமான திரு பழனியப்பனுக்கான இரங்கல் உரையுடன் தொடங்கிய நேற்றைய கூட்டத்தில், அவரின் நாடாளுமன்றப் பங்களிப்புகளையும் சமூக சேவை களையும் மெச்சிப் பேசினார் பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான இந்திராணி ராஜா. “தமிழ்மொழி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளும் மொழிபெயர்ப்பும் என்றும் நிலைத்திருக்கும்,” என்றார் குமாரி இந்திராணி […]